For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நைஜீரிய பள்ளிக்குள் புகுந்து 46 மாணவர்களை குண்டு வைத்து கொன்ற தீவிரவாதிகள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

அபுஜா: பள்ளிக்குள் புகுந்து தீவிரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 46 அப்பாவி மாணவர்கள் உடல் சிதறி பலியான சம்பவம் நைஜீரிய நாட்டின் போட்டிஷ்கும் நகரில் இன்ற்று நடந்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டத்தை கடைபிடிக்க வலியுறுத்தி 2002ம் ஆண்டுமுதல் அந்த நாட்டு அரசுக்கு எதிராக, போகோஹாரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 2009 ஆண்டு முதல் நைஜிரியாவில் தாங்கள் கைபற்றிய பகுதிகளை இஒஸ்லாமிய நாடாக அறிவித்து கொண்டனர். இது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இவர்களால் 30 லட்சம் மக்கள் பாதிக்கபட்டு உளளனர்.

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதிகளின் பெரும்பாலான பகுதிகள் தீவிரவாதிகளின் வசம் உள்ளது. இந்நிலையில், நைஜீரியாவின் யோபே மாநிலத்தில் பொட்டிஷ்கும் நகரில் உள்ள அரசு அறிவியல் பள்ளிக்கூடத்தில் நுழைந்த தற்கொலை படைதீவிரவாதி ஒருவன் குண்டை வெடிக்க செய்தான். இதில் பள்ளிகூட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இந்த தக்குதலில் 47 மாணவர்கள் பலியானார்கள்.

79 மாணவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்ட மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்று கொள்ளவில்லை ஆனால் பாதுகாப்பு படையினர் போகோஹாரம் தீவிரவாதிகள் மீது தான் சந்தேகமுள்ளது.

English summary
At least 46 students have been killed by a suicide bomber at a school assembly in the north-eastern Nigerian town of Potiskum, police have said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X