For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் உடைமைகள் மாயம்!

Google Oneindia Tamil News

கெய்ர்ன்ஸ்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டிற்கு சென்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் உடைமைகள் விமான நிலையத்தில் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கெய்ர்ன்ஸில் உலகின் நிதி அமைச்சர்கள் மற்றும் வங்கி ஆளுநர்களுக்கான ஜி-20 மாநாடு இந்த வாரத்தின் இறுதியில் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ள இந்தியாவின் சார்பில், மத்திய வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஏர் இந்தியா விமானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு பயணித்தார்.

உடைமைகள் பரிசோதனை:

உடைமைகள் பரிசோதனை:

சிட்னியில் இறங்கி கெய்ர்ன்ஸ் செல்வதற்காக இணைப்பு விமானத்தில் செல்லும் முன் விமானநிலையத்தில் உடைமைகள் பரிசோதனைக்கு அனுப்பட்டது.

மாயமான உடைமைகள்:

மாயமான உடைமைகள்:

ஆனால் பரிசோதனைக்கு பிறகு தனது உடைமைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

டுவிட்டரில் தகவல்:

டுவிட்டரில் தகவல்:

இந்த தகவலை டிவிட்டரில் தெரிவித்த நிர்மலா சீத்தாரமன், " இணைப்பு விமானத்தை பிடிப்பதற்காக சிட்னியில் இறங்கினோம். பரிசோதனை செய்யப்பட்ட எனது உடமைகள் கண்டு பிடிக்க முடியவில்லை" என தெரிவித்துள்ளார்.

 வழக்கமான உடைகள்:

வழக்கமான உடைகள்:

சிறிது நேரம் கழித்து வெளியிட்ட மற்றொரு டிவிட்டர் பதிவில், "கெய்ர்ன்ஸ் செல்வதற்கான இணைப்பு விமானத்தில் உள்ளோம். சூட்கேஸில் இருந்த எனது வழக்கமான உடைகள் அனைத்தும் மாயமாகியுள்ளது.

ஆபத்தான நிலைமை:

ஆபத்தான நிலைமை:

கெய்ர்ன்ஸில் புடவைகளை வாங்க முடியும் என்று என்னால் உறுதியாக கூற முடியவில்லை. நிலைமை ஆபத்தாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

உடைமைகள் கண்டுபிடிப்பு:

உடைமைகள் கண்டுபிடிப்பு:

இதனிடையே, காணாமல் போன உடைமைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஆறு மணிநேரத்தில் கெய்ர்ன்ஸுக்கு அது சென்றடையும் என்று ஏர் இந்தியா மேலாளர் மாது மாதேன் தெரிவித்துள்ளார்.

English summary
Union Minister of State for Commerce and Industry Nirmala Sitharaman has become the latest victim of misplaced baggage on an Air India flight as her checked in luggage went missing on her way to Australia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X