For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உக்ரைனில் விமானம் சுட்டுத்தள்ளப்பட்டது இன்னும் உறுதியாகவில்லை: மலேசிய பிரதமர் ரசாக்

By Siva
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசிய விமானம் சுட்டுத்தள்ளப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

No distress call from crashed plane: Malaysian PM

மலேசிய விமானம் சென்ற பாதை பாதுகாப்பானது என்று சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனம் மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்தன. மலேசிய விமானம் சென்ற பாதையில் எந்தவித கெடுபிடிகளும் இல்லை.

இந்நிலையில் விமானம் சுட்டுத்தள்ளப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

விமானம் சுட்டுத் தள்ளப்பட்டது உறுதியானால் குற்றவாளிகள் நீதிக்கு முன்பு நிறுத்தப்படுவார்கள். இது குறித்து விசாரணை நடத்துவதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ எனக்கு உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக நான் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பேசியுள்ளேன். விபத்து நடந்த இடத்திற்கு சர்வதேச குழுவை அனுப்புவதாக அவர் தெரிவித்தார்.

மலேசியாவுக்கு ஏற்கனவே துயரமான வருடம் இது. இந்நிலையில் இன்று துயரமான நாள். விமானம் விபத்துக்குள்ளானபோது அதில் இருந்து அபாய அழைப்பு வரவில்லை என்றார்.

English summary
Malaysian Prime Minister Najib Razak has said that Ukrainian authorities believed that the Malaysia Airlines Flight MH17 was shot down, but it is yet to be verified.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X