குளிர்கால ஒலிம்பிக்கில் விளையாடும் நோரோ வைரஸ்.. 1200 காவலர்கள் பாதிப்பு.. ஊரைவிட்டு வெளியேற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பியோங்சாங்: சரியாக நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். இது லீப் வருடங்களில் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து இரண்டு வருட இடைவெளியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சிறிய அளவில் நடக்கும். 2018ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தற்போது தென் கொரியாவின் 'பியோங்சாங்' என்ற இடத்தில் நடக்கிறது.

இந்தக் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறது. இது நோரோ வைரஸ் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

 என்ன

என்ன

இந்த வைரஸ் மிகவும் மோசமானது ஆகும். உணவு மூலமும், தண்ணீர் மூலமும் இந்த வைரஸ் பரவும். இதனால் உயிரிழப்பு ஏற்படாது. இதற்குத் தடுப்பூசி இருக்கிறது. குளிர்காலத்தில் பொதுவாக இந்த வைரஸ் தாக்கும்.

 பிரச்சனை

பிரச்சனை

இதனால் 1200 காவலர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எல்லோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தொடர் வாந்தி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் ஆகியவை இவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. மோசமான உடல் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்கள்.

 வெளியேறினார்கள்

வெளியேறினார்கள்

இதில் 41 பேர் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 1200 பேரும் உடனடியாக அங்கு இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது .

 தென்கொரிய ராணுவம்

தென்கொரிய ராணுவம்

அங்குப் பாதுகாப்பு செய்யப் பணியாளர்கள் இல்லாமல் போய் உள்ளனர். தற்போது இதற்காக தென்கொரிய ராணுவம் களம் இறக்கப்பட்டு இருக்கிறது. 900 ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்காக களம் இறங்கி இருக்கிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Norovirus affects 1,200 securities in Winter Olympics. The have departed from the Olympic village.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற