For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுதான் கிம் ஜாங் உன் மகள்.. கையை பிடித்து அழைத்து வரும் வடகொரிய அதிபர்.. பொதுவெளியில் முதல் முறை!

Google Oneindia Tamil News

பியாங்யாங்: மர்ம தேசமாக அறியப்படும் வடகொரியாவில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாத அளவுக்கு ரகசியங்கள் பாதுகாக்கப்படும் நிலையில், முதல் முறையாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தன் மகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

உலகின் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட நாடாக அறியப்படும் நாடு வடகொரியா.

அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது வெளி உலகத்திற்கு அவ்வளவு எளிதாக தெரிந்துவிடாது.

இந்த 2K கிட்ஸ் மோசம்பா.. ஸ்கூல் லீவ் எடுக்குறது எப்படி? பிரதீப் ஜான் கொடுத்த சூப்பர் ஐடியா இந்த 2K கிட்ஸ் மோசம்பா.. ஸ்கூல் லீவ் எடுக்குறது எப்படி? பிரதீப் ஜான் கொடுத்த சூப்பர் ஐடியா

 ஏராளமான கெடுபிடிகள்

ஏராளமான கெடுபிடிகள்

ஊடகங்களுக்கு கட்டுப்பாடு, கருத்து சுதந்திரங்களுக்கு கட்டுப்பாடு என ஏராளமான கெடுபிடிகள் நிறைந்த நாடாக வடகொரியா உள்ளது. சிறிய தவறுகளுக்கு கூட கொடூரமான தண்டனை என சர்வாதிகார போக்குடன் வடகொரியா செயல்பட்டு வருகிறது. வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் இருக்கிறார். உலக வல்லரசு நாடான அமெரிக்காவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் கிம் ஜாங் உன் , சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை எல்லாம் காதில் போட்டுக்கொள்வதில்லை.

 அணு ஆயுத சோதனை

அணு ஆயுத சோதனை

அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை என உலக நாடுகளை மிரட்டியும் வருகிறார். வடகொரியாவின் இந்த அடாவடி நடவடிக்கைக்கு எதிராக அந்த நாட்டிற்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், இது எதைப்பற்றியும் கவலைப்படாத கிம் ஜான் உன் தொடர்ந்து ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கூட அமெரிக்கா வரை சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை சோதனையை கிம் ஜாங் உன் நடத்தினார்.

கிம் ஜாங் உன்னின் தனிப்பட்ட வாழ்க்கை

கிம் ஜாங் உன்னின் தனிப்பட்ட வாழ்க்கை

மர்ம தேசமாக அறியப்படும் வடகொரியாவில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது என்பது போலவே.. கிம் ஜாங் உன்னின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவலும் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. கிம் ஜான் அங் சகோதரி அரசின் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். ஆனால், கிம் ஜாங் மனைவி பற்றியோ அவருக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது பற்றியோ பெரிதாக எந்த தகவலும் கசிந்தது இல்லை.

முதல் முறையாக தனது மகளுடன்

முதல் முறையாக தனது மகளுடன்

இந்த நிலையில், முதல் முறையாக கிம் ஜாங் உன் தனது மகளுடன் பொதுவெளியில் தோன்றியிருக்கிறார். ஏவுகணை சோதனையை பார்வையிட வந்த கிம் ஜாங் உன் தனது மகளின் கைகளை பிடித்துக் கொண்டு நிற்கும் புகைப்படங்கள் வடகொரியாவின் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், அவரது பெயர் உள்ளிட்ட எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மென்

கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மென்

எப்போதும் மர்மம் நிறைந்த நபராக வலம் வரும் கிம் ஜங் உன்னிற்கு 'ஜூ ஏ' என்ற மகள் இருப்பதாக கடந்த 2013-ஆம் ஆண்டு முன்னாள் கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மென் இங்கிலாந்து நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அப்போதுதான் கிம் ஜாங் உன்னிற்கு மகள் இருக்கும் விஷயமே பரவலாக வெளியில் தெரிய ஆரம்பித்தது. கிம் ஜாங் உன் தனது குடும்பத்தினருடன் நன்றாக நேரத்தை செலவிடுவதாகவும் ஒரு நல்ல தந்தையாக இருப்பதாகவும் தெரிவித்த டென்னிஸ் ரோட்மென், கிம் ஜாங்உன்னின் மனைவி ரி சொல் ஜூவிடம் தான் பேசியதாகவும் கூறியிருந்தார்.

கிம் ஜான் உன்னிற்கு 3 குழந்தைகள்?

கிம் ஜான் உன்னிற்கு 3 குழந்தைகள்?

கடந்த 2011 ஆம் ஆண்டு வடகொரிய தலைவர் கிம் ஜொங்-இல்லின் மறைவுக்குப் பிறகு கிம் ஜாங் உன் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார். 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகே கிம் ஜாங் உன் திருமணம் செய்து கொண்டது குறித்த தகவலை வடகொரிய ஊடகம் வெளியிட்டது. எனினும், இதற்கு முன்பு அதாவது 2009-வாக்கில் கிம் ஜாங் உன்னுக்கு - ரி சொல் ஜுவிற்கும் திருமணம் நடைபெற்று இருக்கலாம் என்று யூகங்கள் பரவி வருகின்றன. கிம் ஜான் உன்னிற்கு 3 குழந்தைகள் இருப்பதாக தென்கொரிய உளவு அமைப்பு தெரிவித்துள்ள

English summary
A photo of North Korean leader Kim Jong-un with his daughter has been released for the first time in a time where no one knows what is happening in North Korea, known as a mysterious country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X