For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காற்றில் குறுகிய தூரம் பரவும், அறிகுறி இல்லாதவர்களிடமிருந்தும் பரவும்: கொரோனா பற்றி WHO புது அப்டேட்

Google Oneindia Tamil News

ஜெனிவா: கொரோனா பரவல் எப்படி நிகழக்கூடும் என்பது பற்றி உலக சுகாதார அமைப்பு (W.H.O.) மேலும் சில எச்சரிக்கைகளை பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடுவது மற்றும் எச்சில் போன்றவற்றின் மூலம்தான் பரவும் என ஹூ கூறி வந்தது. ஆனால், காற்று வாயிலாகவும் வைரஸ் பரவக் கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் சமீபத்தில், ஹூ அமைப்புக்கு கடிதம் எழுதி, கொரோனா காற்றில் பரவும் என்று அறிவிக்க வலியுறுத்தினர். இதையடுத்து ஹூ ஆய்வுகளை மேற்கொண்டது.

 கொரோனா சிகிச்சை சோதனை சக்சஸ்.. வந்தது மேலும் ஒரு மருந்து.. பயோகானின் சொரியாசிஸ் ஊசி மருந்துக்கு ஓகே கொரோனா சிகிச்சை சோதனை சக்சஸ்.. வந்தது மேலும் ஒரு மருந்து.. பயோகானின் சொரியாசிஸ் ஊசி மருந்துக்கு ஓகே

அறிகுறி இல்லாத நபர்கள்

அறிகுறி இல்லாத நபர்கள்

இதையடுத்து புதிய அப்டேட்டை ஹூ வெளியிட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையில், காய்ச்சல், தும்மல், சளி போன்ற அறிகுறிகள் இல்லாத நபர்களாலும், பிறருக்கு கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்று ஹூ தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் அறிகுறிகளுடன் இருந்தாலும் இல்லாதபோதும் வைரஸை பரப்ப முடியும் என்கிறது ஹூ. இது முக்கியமான அறிவிப்பாகும். ஆனால், தாமதமான அறிவிப்பாகும். பல சமீபத்திய ஆய்வுகளைப் பற்றி குறிப்பிட்டு, WHO மேலும் கூறுகையில், நெரிசலான இன்டோர் பகுதிகளில் மனிதர்களிடையே கொரோனா காற்றில் பரவக் கூடும். ஒருவர் பாடும்போதோ, ​​உணவகங்களில் அல்லது உடற்பயிற்சி கூடங்களில், இதற்கான வாய்ப்பு உள்ளது.

இன்டோர் பகுதிகள்

இன்டோர் பகுதிகள்

குறுகிய தூரமாக இருந்தால் இப்படி காற்றில் பரவும். குறிப்பாக உட்புற இடங்களில், பாதிக்கப்பட்ட நபர்களுடன் நீண்ட நேரம் இருக்க நேரிட்டாலோ, போதுமான காற்றோட்டம் இல்லாத இடங்களாக அவை இருந்தாலோ, இதுபோன்ற பரவலுக்கு வாய்ப்பு உள்ளது என்பதை நிராகரிக்க முடியாது. ஆனால் இந்த வைரஸ் வான்வழியால் பரவுவதாக நினைக்கவில்லை. அதேநேரம், வெளிப்புறமாக இருந்தாலும், காற்றில் சிறிது தூரம் பறந்து செல்ல வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் இருமல், தும்மல், பேச்சு அல்லது பாடும்போது வைரஸ் காற்று வழியாக குறுகிய தூரம் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.

தொடுவது

தொடுவது

பாதிக்கப்பட்ட நபர் தொடுவது வழியாக மேற்பரப்புகள் வழியாகவும் பரவுகிறது. அதாவது கதவு, லிப்ட் பொத்தான்கள், ஹேண்ட்ரெயில்கள், தொலைபேசிகள், சுவிட்சுகள், பேனாக்கள், விசைப்பலகைகள் மற்றும் மருத்துவரின் ஸ்டெதாஸ்கோப் வழியாக கூட பரவக் கூடும். இப்படித்தான், அதிகமாக பரவுகிறது. எனவேதான், இந்த மேற்பரப்புகளில் கிருமிநாசினி போட்டு சுத்தப்படுத்துவது அவசியப்படுகிறது.

Recommended Video

    Corona Medicine : 'அவசரகால பயன்பாட்டிற்காக' Itolizumab மருந்து | Oneindia Tamil
    ஆய்வுகள் தேவை

    ஆய்வுகள் தேவை

    வெவ்வேறு பரிமாற்ற பாதைகளின் வழியாக கொரோனா பரவுவதை தெளிவுபடுத்துவதற்கு அவசர உயர்தர ஆராய்ச்சி தேவை. காற்றின் வழியாக கொரோனா பரவ தேவையான வைரஸின் அளவு, அறிகுறியற்ற மற்றும் அறிகுறி உள்ளோரிடமிருந்து பரவும் அளவு போன்றவற்றை சரியாக அளவிட ஆய்வுகள் தேவை. இவ்வாறு WHO கூறியுள்ளது. முன்பு, சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள் போன்ற கொரோனா நோயாளிகளுடன் நெருங்கி பழகும் வாய்ப்புள்ளோருக்கு மட்டுமே இந்த வைரஸ் காற்றில் பரவ வாய்ப்பு இருப்பதாக, WHO கூறியிருந்தது. இப்போது அதன் கருத்தை மாற்றிக்கொண்டுள்ளது. இந்த நிலையில் ஹு செயல்பாடு திருப்தியளிக்கவில்லை என அமெரிக்கா, விலகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    WHO has formally acknowledged the possibility that the novel coronavirus can remain in the air in crowded indoor spaces, where “short-range aerosol transmission… cannot be ruled out”.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X