For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவை விட சவுதியில் பணியாற்றும் இந்தியர்கள் இறக்கும் அபாயம் 10 மடங்கு அதிகம்!

By Siva
Google Oneindia Tamil News

ரியாத்: அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்களை விட குவைத் அல்லது சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் இந்தியர்கள் பலியாகும் அபாயம் 10 மடங்கு அதிகமாக உள்ளது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், கத்தார் மற்றும் பஹ்ரைனில் 70 லட்சம் இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள். 2022ம் ஆண்டு கத்தாரில் நடக்க உள்ள ஃபீபா கால்பந்து போட்டிக்கான அரங்கு அமைக்கும் பணியாளர்களின் நிலைமை மோசமாக உள்ளது என்று புகார் எழுந்தது. 2010ம் ஆண்டில் இருந்து இதுவரை கத்தாரில் மட்டும் 1, 387 இந்தியர்கள் இறந்துள்ளனர்.

பீஃபா போட்டி துவங்கும் முன்பு கத்தாரில் பலியாகும் பணியாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கத்தாரில் 6 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள்.

என்.ஆர்.ஐ.

என்.ஆர்.ஐ.

ஆண்டுதோறும் 1 லட்சம் வெளிநாடு வாழ் இந்தியர்களில் சராசரியாக 53 பேர் இறக்கின்றனர். இறக்கும் ஒவ்வொரு லட்சம் வெளிநாடு வாழ் இந்தியர்களில் 65 முதல் 78 பேர் சவுதி, அமீரகம், ஓமன் மற்றும் குவைத்தில் வேலை பார்ப்பவர்கள்.

அமெரிக்கா

அமெரிக்கா

சவுதி, ஓமன், அமீரகம், குவைத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இறந்த இந்தியர்களின் சதவீதம் 80 முதல் 90 சதவீதம் வரை குறைவாக உள்ளது.

குவைத்

குவைத்

அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்களை விட குவைத் அல்லது சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் இந்தியர்கள் பலியாகும் அபாயம் 10 மடங்கு அதிகமாக உள்ளது.

மருத்துவ சிகிச்சை

மருத்துவ சிகிச்சை

சவுதியை விட கத்தாரில் இறக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பணியாளர்களுக்கு சிறப்பான வசதிகள் மற்றும் உரிய மருத்துவ சிகிச்சை அளித்தால் குவைத், சவுதி, கத்தாரில் பல இந்தியர்களின் உயிரை காப்பாற்றலாம்.

English summary
Non resident Indians living in Saudi, Kuwait have ten times the risk of death compared to NRIs in the US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X