"பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசிவிடுவேன்!" திடீரென டென்ஷனான இம்ரான் கான்.. பரபர காரணம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலுக்குப் பின்னர் பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாகப் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. ஏற்கனவே இலங்கையில் பொருளாதார பாதிப்பு கையை மீறிச் சென்றுவிட்டது.
அதேபோல பாகிஸ்தான் நாட்டிலும் சில மாதங்களாகவே பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. அந்நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கான் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இம்ரான் கான்
அவருக்கு பதிலாக ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டின் புகிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரம் தனக்கு எதிராக அந்நிய நாட்டுச் சதி நடைபெற்றுள்ளதாக இம்ரான் கான் குற்றஞ்சாட்டி இருந்தார். இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய இம்ரான் கான், பாகிஸ்தான் நாட்டை திருடர்களிடம் ஒப்படைப்பதை விட, அதில் அணுக்குண்டை வீசி விடலாம் என்ற ரீதியால் சாடியுள்ளார்,

அணுக்குண்டை வீசிவிடலாம்
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய இம்ரான் கான், "நாட்டில் இப்போது இருக்கும் திருடர்களின் செயல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்ற திருடர்களிடம் நாட்டை ஒப்படைப்பதை விட, நாட்டின் மீது அணுக்குண்டை வீசிவிட்டு செல்லலாம். நடைபெறாத ஊழல் குறித்த கதைகளைக் கூறுவதற்குப் பதிலாக, நாட்டை முறையாக ஆட்சி செய்வதில் அவர்கள் கவனம் செலுத்தினால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

திருடர்கள்
இப்போது ஆட்சியில் அமர்ந்துள்ள திருடர்கள் நீதித்துறை உள்ளிட்ட அனைத்து நிறுவன அமைப்புகளையும் அழித்துவிட்டார்கள். இப்போது இந்த குற்றவாளிகளின் வழக்குகளை எந்த அதிகாரி தான் விசாரிப்பார். வரும் மே 20ஆம் தேதி திட்டமிட்டபடி மாபெரும் பேரணி நடைபெறும். அப்போது நாங்கள் தலைநகருக்குள் நுழைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" என்றும் தற்போதுள்ள பாகிஸ்தான் அரசை அவர் கடுமையாக எச்சரித்தார்.

பதிலடி
அதேநேரம் அந்நாட்டின் இந்நாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தானை இம்ரான் கான் பிளவுபடுத்த முயல்வதாகச் சாடி உள்ளார். பாகிஸ்தான் அரசு நிறுவன அமைப்புகளைக் குறிவைத்து இம்ரான் கான் பேசும் பேச்சுகள் நாட்டு மக்களின் மனதில் விஷம் கலக்கும் வகையில் உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், அரசைத் திருடர்கள் மற்றும் கொள்ளைக்காரர்கள் என்று குறிப்பிடுவதன் மூலம் இம்ரான் கான் நாட்டை பிளவுபடுத்த முயல்வதாகவும் அவர் சாடியுள்ளார்.

மாபெரும் பேரணி
தற்போதுள்ள பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இம்ரான் கான் வரும் மே 20ஆம் தேதி மாபெரும் பேரணி ஒன்றை அறிவித்துள்ளார். இந்த பேரணியில் சுமார் 20 லட்சம் மக்கள் வருவார்கள் என்று இம்ரான் கான் அறிவித்துள்ளார். 20 லட்சம் மக்களுடன் பாக். தலைநகர் இஸ்லாமாபாத்தில் நுழைவதே இம்ரான் கானின் திட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications