For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க குடியுரிமைச் சட்டத் திருத்தம்.. 5 லட்சம் இந்தியர்களுக்கு கிரீன் கார்டு - ஒபாமா அறிவிப்பு

By Shankar
Google Oneindia Tamil News

வாசிங்டன்(யு.எஸ்): அமெரிக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி மெஜாரிட்டி ஆன நிலையில், அதிபர் ஒபாமா அதிரடியாக குடியுரிமைச் சட்ட திருத்தத்தை அறிவித்துள்ளார்.

இதன் மூலம் சட்டத்தை மீறி எல்லை தாண்டி அமெரிககாவுக்குள் வந்த, சுமார் 4 மில்லியன் பேர்கள் பலனைடைவார்கள் என கூறப்படுறது. இவர்கள் அனைவரும் லத்தீன் இன மக்கள் ஆவார்கள்.

Obama’s Immigration Plan Could Shield Five Million

மேலும் இந்தியர்கள் உட்பட சட்ட்பூர்வமாக வேலை நிமித்தம் அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கும் சில சலுகைகள் அறிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 5 லட்சம் இந்தியர்களுக்கு, க்ரீன் கார்டுகளுக்கான சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றம் குடியுரிமை சீர்திருத்த மசோதாவை நிறைவேற்றாமல் இழுத்தடித்துக் கொண்டிருப்பதால், தனது அதிகார வரம்புக்கு உட்பட்டு இந்த ஆணைகளைப் பிறப்பித்தாக தொலைக்காட்சி மூலம் தெரிவித்தார்.

அதிபர் ஒபாமாவுக்கு இத்தகைய அதிகாரம் இல்லை என சட்டத்துறை தெரிவித்துள்ளதாக குடியரசுக் கட்சியினர் குரல் எழுப்பியுள்ளனர்.

ஒபாமாவின் இந்த ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்தை முடக்க நினைத்தால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஒபாமா எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இடைத்தேர்தல் முடிவுற்று பதினைந்து நாட்களில் மீண்டும் அமெரிக்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Up to four million undocumented immigrants who have lived in the United States for at least five years can apply for a program that protects them from deportation and allows those with no criminal record to work legally in the country, President Obama is to announce on Thursday, according to people briefed on his plans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X