For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈராக்கின் புதிய பிரதமர் மக்களை ஒன்றுபடுத்துவார் - ஒபாமா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று ஈராக் பிரச்சனை தொடர்பாக மக்களுக்கு விளக்கம் அளித்தார்.

அதில் அவர், ஈராக்கில் தீவிரவாத சக்திகள் குர்து மக்களின் எப்ரில் நகரை கைப்பற்றுவதை தடுக்கும் வகையிலும், அங்குள்ள அமெரிக்க மக்களை காக்கும் வகையிலும் கடந்த சில நாட்களாக அமெரிக்க விமானப்படை விமானங்கள் வெற்றிகரமாக வான்வழி தாக்குதலை நடத்தின.

குர்திஷ் படைகளுக்கு தேவையான ராணுவ ஆலோசனை மற்றும் உதவியை அதிகரித்து ஐ.எஸ்.ஐ.எஸ். படைகளுக்கு எதிராக தரைவழியாக அவர்கள் போராடி தங்களது நகரத்தை பாதுகாத்துக் கொள்ளவும் உதவி வருகிறோம்.

Obama says Iraq took 'promising step' nominating new PM

அதே வேளையில், சிஞ்சார் மலைப்பகுதியில் தவித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான உதவிகளையும் நமது விமானப்படை விமானங்கள் மூலமாக மனிதநேய அடிப்படையில் நாம் அன்றாடம் செய்து வருகிறோம்.

மலை மீது இருக்கும் மக்களை தாக்க நினைக்கும் எந்த தீவிரவாத சக்தியையும் தாக்கி அழிக்கவும், அங்குள்ள நமது விமானப்படை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் பெரிதாகிக் கொண்டே வரும் சிக்கலான அரசியல் நிலவரத்துக்கு அமெரிக்க ராணுவத்தால் தீர்வு காண முடியாது.

ஈராக்கில் உள்ள அனைத்து மக்களின் சட்ட பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கவும், ஐ.எஸ்.ஐ.எல். படைகளுக்கு எதிராக நாட்டின் போராட்டத்தை ஒருமுகப்படுத்தவும், ஈராக் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிலையான அரசை ஏற்படுத்துவதன் மூலமாக மட்டுமே அங்கு நிலவி வரும் பிரச்சனைக்கு நீடித்த தீர்வாக அமையும்.

இதன் முன்முயற்சியாக மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஈராக் அதிபர், அந்நாட்டின் அரசியல் சட்டத்தின்படி, ஹைதர் அல் அபாடியை பிரதமராக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது, ஈராக்கில் உள்ள பல்வேறு சமுதாயங்களை ஒன்றுபடுத்தும் விதமான புதிய அரசை உருவாக்கும் முக்கியமான நடவடிக்கையாகும்" என்று தெரிவித்தார்.

English summary
US President Barack Obama has said the nomination of Haider al-Abadi as Iraq's prime minister-designate is a "promising step forward".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X