For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்ட் டிரம்ப் பற்றி ஒபாமா மறைமுக விமர்சனம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடுபவர் அல்ல என அமெரிக்க அதிபர் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடியவுள்ளதை அடுத்து, வரும் நவ.,8-ந் தேதி புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. முன்னதாக நடந்த பிரைமரி தேர்தலில் வெற்றி பெற்ற, ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

Obama says Trump is not populist

இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, பெயரைக் குறிப்பிடாமல் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பை மறைமுகமாக விமர்சனம் செய்து கூறுகையில், சிலர் தொழிலாளர்களுக்காகவும், சமூகப் பிரச்சனைகளுக்கும், ஏழை குழந்தைகளின் நல்வாழ்வுக்கும், எதுவும் செய்தது கிடையாது. மேலும் தொழிலாளர்கள் மற்றும் சாதாரண மக்களின் பொருளாத நிலைக்கு எதிராக செயல்படுகின்றனர்.

எனவே அவர்களால் திடீரென மக்களின் ஆதரவை பெற முடியாது. அவர்கள் வெற்றிபெற வேண்டுமானால் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டாக வேண்டும். அதற்காக அவர் சாதரண மக்களுக்காக போராடுவது போல, வெளிநாட்டவர் மீதான எதிர்ப்பு, மற்றும் இழிவான செயல்களில் ஈடுபடுகிறார்.

அவர்கள் எங்கிருக்கிறார்கள்? அவர்கள் மக்களின் தரப்பில் இருந்து ஏதாவது செய்துள்ளனரா? கூலி வேலை செய்யும் மக்களுக்காக ஏதாவது வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார்களா? என்று ஒபாமாக கேள்வியும் எழுப்பியுள்ளார்.

English summary
US President Barack Obama has disputed the idea that Donald Trump is a populist and described the presumptive Republican nominee's remarks as xenophobic and cynical.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X