தடுப்பூசியின் செயல்திறனை ஓமிக்ரான் குறைக்கிறது.. வேகமாகவும் பரவுகிறது! ஹூ எச்சரிக்கை
ஜெனீவா: டெல்டாவை விட வேகமாக பரவும் ஓமிக்ரான், தடுப்பூசியின் செயல்திறனை குறைத்துவிடுகிறது என்றும் அது குறைவான அறிகுறிகளையே ஏற்படுத்துவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் கொரோனா பாதிப்புக்கு முக்கிய காரணம் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வேரியண்ட். இது தீவிரமடைந்ததால்தான் இந்தியாவில் இரண்டாவது அலை உருவானது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.
மூன்றாவது அலையை எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் தேதி புதிய வேரியண்ட் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 27 நாடுகளுக்கு மேல் பரவிய இந்த வேரியண்ட் இந்தியாவில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி நுழைந்தது.
இந்தியாவில் இதுவரை ஓமிக்ரானால் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பல நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில் ஓமிக்ரான் டிசம்பர் 9ஆம் தேதி நிலவரப்படி 63 நாடுகளில் பரவியது. தென்னாப்பிரிக்காவில் மிகவும் வேகமாக பரவுவது கண்டறியப்பட்டது.
டெல்டா வைரஸை காட்டிலும் மிக வேகமாக பரவுகிறது. அதே நேரம் டெல்டா பிரிட்டனில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஓமிக்ரான் பரவும் வீதம், நோய் எதிர்ப்பு சக்தி, அதிக பரவல் உள்ளிட்டவை குறித்து சரியான தரவுகள் இல்லாததால் எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை.
ஆனால் ஓமிக்ரான் தடுப்பூசியின் செயல்திறனை குறைக்கிறது என்பது ஆதாரப்பூர்வமாக முன்னரே நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் லேசான பாதிப்புகளை கொடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளது. இந்த ஓமிக்ரானை எதிர்த்து போராட இரு தவணை தடுப்பூசிகளுடன் கூடுதலாக ஒரு பூஸ்டர் டோஸ் போட வேண்டும் என தடுப்பூசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் பரவிய ஆரம்ப காலத்தில் அது வேகமாகவும் அதே நேரத்தில் கடுமை குறைந்தும் காணப்பட்டதாக சொல்லப்படுகிறது. டெல்டா, பீட்டாவை விட அதிகம் பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டதாக வரைப்படம் சுட்டிக் காட்டுகிறது. இந்த வரைப்படத்தில் ஓமிக்ரான் ஆரம்ப காலத்திலேயே எத்தனை வேகமாக பரவுகிறது என்பதை காணலாம்.
Recommended Video
அது போல் 3 அலைகளின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் முதல் 20 நாட்களில் டெல்டாவை விட மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே ஓமிக்ரான் பாதித்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் டெல்டா, பீட்டாவை காட்டிலும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவையெல்லாம் ஆரம்ப கால தரவுகள்.
Initial data from South Africa suggests that #Omicron variant spreads faster but less severe. But these are early days.
— Vignesh Radhakrishnan (@VigneshJourno) December 13, 2021
1. Case rate during Omicron wave is higher than Delta, Beta. pic.twitter.com/r97hfuzOkc












Click it and Unblock the Notifications