For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வட கொரியாவுடன், ஒரே ஒரு விஷயம் மட்டுமே செயல்படும் - அதிபர் டிரம்ப்

By BBC News தமிழ்
|
டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜாங்-உன்
Reuters
டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜாங்-உன்

வட கொரியாவுடன் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லாத நிலையில், ஒரே ஒரு விஷயம் மட்டுமே செயல்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

தனது டுவிட்டர் பதிவில், அதிபர்களும் அவர்களின் நிர்வாகிகளும் கடந்த 25 ஆண்டுகளாக வட கொரியாவுடன் பேசி வருகின்றனர். இருந்தும் எதுவும் நடக்கவில்லை என பதிவிட்டுள்ளார்.

அதற்கு மேல், அதிபர் அதை விவரிக்கவில்லை.

வட கொரியாவின் அணுஆயுத செயல்பாடுகள் மற்றும், அதன் ராக்கெட் சோதனைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட விஷயங்களில், இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து, மிகவும் கடினமான சொல்லாட்சி நடந்துவருகிறது.

நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளில் வைத்து அனுப்பும் வகையிலான, சிறியரக ஹைட்ரோஜன் குண்டுகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக, சமீபத்தில் வட கொரியா தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பாக, அமெரிக்கர்களின் விருப்பத்தை பாதுகாக்கவும், அந்த பகுதியில் உள்ள, தனது கூட்டாளிகளை பாதுகாக்கவும் தேவை ஏற்பட்டால், வட கொரியாவை அழிப்போம் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

சனிக்கிழமை, அமெரிக்க அதிபரால் பதிவிடப்பட்டுள்ள டுவிட்டுகளும், ரகசிய அறிவிப்புகளே என்கிறார், வாஷிங்டென்னில் உள்ள பிபிசியின் செய்தியாளர் லாரா பிக்கர்.

கடந்த வாரம், வலுத்துவரும் பதற்றத்திற்கு தீர்வு காண்பதற்காக, வட கொரியாவுடன், அமெரிக்க வெளியுறவுத்துரை செயலர் ரெக்ஸ் டில்லர்சன், நேரடியாக தொலைபெசி மூலம் பேசியதாக பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

அதன் பின்பு, டுவிட்டரில் பதிவிட்ட அதிபர் டிரம்ப், உங்களின் சக்தியை சேமித்துக்கொள்ளுங்கள் ரெக்ஸ். நாம் எதை செய்ய வேண்டுமோ, அதை செய்வோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

சனிக்கிழமை, அதிபர் டிரம்ப், தனக்கும், வெளியுறவுத்துரை செயலருக்கும் நல்ல நட்பு உள்ளது என்றும், அவர் இன்னும் கூட கடினமானவராக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

வாரத்துவக்கத்தில், டில்லர்சன், அதிபருக்கும் தனக்கும் இடையே பிளவு உள்ளதாக கூறப்படுவதையும், அவர் அதிபரை கயவன் என அழைத்தாக கூறப்படும் புரளிகளையும் மறுத்தார்.

வடகொரியா குறித்த, அதிபர் டிரம்பின் சமீபத்திய கருத்துக்கள், கடல் அலைகளின் ஒலியை போன்றது என கூறும் நமது செய்தியாளர், இதை வட கொரியா ஒரு மிரட்டலாக புரிந்துகொள்ளும் அச்சமுள்ளது என்கிறார்.

கடந்த மாதம், சர்வதேச கண்டனங்களுக்கு இடையே, வட கொரியா தனது ஆறாவது அணுஆயுத சோதனையை நடத்தியதோடு, பசிபிக் பெருங்கடலில், அடுத்த சோதனை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில், ஐ.நா சபையில் பேசிய அதிபர் டிரம்ப், வடகொரியாவை அழிப்போம் என மிரட்டல் விடுத்ததோடு, அதன் தலைவர் கிம் ஜாங்-உன், ஒரு தற்கொலை பணியில் உள்ளார் என தெரிவித்தார்.

பிற செய்திகள்

BBC Tamil
English summary
"Only one thing will work" in dealing with North Korea after years of talks with Pyongyang brought no results, US President Donald Trump has warned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X