For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்வதேச விண்வெளி மையத்துக்கு கிளம்பிய அமெரிக்க ராக்கெட் வெடித்துச் சிதறியது!

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்பிடல் நிறுவனம் தயாரித்த ஆளில்லா ராக்கெட் விண்ணில் ஏவிய 6 விநாடிகளில் வெடித்துச் சிதறியது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்பிடல் சயன்சஸ் கார்பரேஷன் நிறுவனம் தயாரித்த அன்டாரஸ் ராக்கெட் வெர்ஜினியாவில் உள்ள வாலப்ஸ் தீவில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 6.22 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொருட்களை எடுத்துச் சென்ற அந்த ராக்கெட் ஏவப்பட்ட 6 விநாடிகளில் வெடித்துச் சிதறியது என நாஸா அறிவித்துள்ளது.

{ventuno}

இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை என்றாலும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. முன்னதாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருக்கும் 6 விஞ்ஞானிகளுக்கு தேவையான 2 ஆயிரத்து 200 கிலோ பொருட்களுடன் கிளம்பிய ஆர்பிடல் நிறுவனத்தின் ஆளில்லா சைக்னஸ் விண்கலம் வெடித்துச் சிதறியது.

ஆர்பிடல் நிறுவனம் நாஸாவுடன் 1.9 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அன்டாரஸ் ராக்கெட்டை இரவு நேரத்தில் ஏவியது இதுவே முதல் முறை என்று ஆர்பிடல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் தான் கடந்த 2010ம் ஆண்டில் முதன்முதலாக விண்வெளிக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
An unmanned rocket carrying supplies to the International Space Station exploded six seconds after launch from Wallops Island, Virginia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X