ரூ. 17 லட்சம் பணத்தை வங்கியிலிருந்து எடுத்து தீவைத்து எரித்த பாக். சகோதரிகள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரு விசித்திரமான, அதே சமயம் விபரீதமான சம்பவம் நடந்துள்ளது. இரு சகோதரிகள் வங்கியிலிருந்து ரூ. 17 லட்சம் பணத்தை எடுத்து அதை தீவைத்து எரித்து விட்டனர்.
அவர்கள் பணத்தைப் போட்டு தீவைத்து எரித்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தடுப்பதற்குள் முழுப் பணமும் எரிந்து போய் விட்டது. மேலும், அந்த சகோதரிகளில் மூத்தவர் கையில் இருந்த பிஸ்டலை எடுத்து அக்கம் பக்கத்தினரை மிரட்டவும் செய்ததால் அவர்கள் அருகில் போக அஞ்சினர்.
பணத்தைக் காப்பாற்ற வந்தவர்களைப் பார்த்து, இது எங்கள் பணம். இதை என்ன வேண்டுமா்னாலும் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது. யாரும் அருகில் வரக் கூடாது. வந்தால் சுட்டு விடுவோம் என்று மிரட்டினார் அவர்.
அந்த சகோதரிகளின் பெயர் நஹீத், 40 வயது. ரூபினா, 35 வயது. ஜீலம், பிலால் நகரைச் சேர்ந்தவர்கள். 3 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தேசிய வங்கிக்குப் போன இவர்கள் அங்கு பணத்தை எடுத்தனர். பின்னர் வங்கிக்கு முன்பு வைத்து தீவைத்து எரித்னர்.
இந்த விவகாரம் போலீஸ் காதுக்குப் போய் அவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் பணம் முழுவதும் சாம்பலாகி விட்டது. அந்த சாம்பலைப் போலீஸார் மீட்டனர்.
இந்த சகோதரிகளின் தந்தை பெயர் ராஜா முகம்மது இக்பால். இவர் சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது சொத்தை விற்றுத்தான் ஒரு வருடத்திற்கு முன்பு ரூ. 28 லட்சம் பணத்தைப் பெற்றனர் இரு சகோதரிகளும். அதைத்தான் வங்கியில் போட்டிருந்தனர். அதிலிருந்துதான் ரூ. 17 லட்சத்தை எடுத்து தீவைத்து எரித்துள்ளனர்.
இரு சகோதரிகளும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர்களுக்கு இரு தம்பிகளும் உள்ளனர். ஆனால் அவர்களுடன் இவர்கள் சேர்ந்து வசிக்கவில்லை. தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று இவர்களது வீட்டுக்கு அருகே வசித்து வருபவர்கள் கூறுகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications