தலிபான் தலைவர் முல்லா பராதர் விடுதலை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: தலிபான் தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவரான முல்லா அப்துல் ஹானி பராதரை பாகிஸ்தான் விடுதலை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பராதரை விடுவிக்கவில்லை என்று பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சகம் மறுத்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டார் பராதர். இதைத் தொடர்ந்து அவர் கடந்த 3 ஆண்டுகாலமாக சிறையில் இருந்து வருகிறார்.

தற்போது தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக பராதரை விடுதலை செய்யுமாறு ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், பாகிஸ்தானை கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசு பராதரை இன்று விடுதலை செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்த தகவலை மறுத்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Mullah Abdul Ghani Baradar, co-founder of the Afghan Taliban, has been freed from jail in Pakistan, officials say. There is no official confirmation of the move which comes after requests by the Afghan government which hopes it will boost the Afghan peace process.
Please Wait while comments are loading...