விதவிதமாக தாடி வைக்கத் தடை... பாகிஸ்தான் முடி திருத்தும் தொழிலாளர்கள் அதிரடி முடிவு
வாடிக்கையாளர்களுக்கு நாகரீகமாக தாடி வைக்க முடியாது என பாகிஸ்தான் முடி திருத்தும் தொழிலாலர்கள் அறிவித்துள்ளனர்.
இஸ்லாமாபாத்: பிரெஞ்ச் பியர்ட் மற்றும் இங்கிலிஷ் பியர்ட் அகிய இரண்டு வகை முடித்திருத்தங்களை இனி செய்யப்போவதில்லை என பாகிஸ்தானில் உள்ள முடித்திருத்தும் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
நாகரீகத்தின் காரணமாக எல்லா நாடுகளிலும் ஆண்களிடம் விதவிதமாக தாடி மற்றும் தலைமுடி திருத்தும் கலாச்சாரம் புழக்கத்தில் உள்ளது.

இந்நிலையில், சில குறிப்பிட்ட வகை தாடிகளுக்கு பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள முடிதிருத்தும் தொழிலாளர்கள் தடை விதித்துள்ளனர்.
இது தொடர்பாக பெஷாவரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கைபர் - பகுன்வா முடித்திருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஷெரிப் காலோ, 'கைபர் - பகுன்வா மாகாணங்களில் இந்த முடிவு அமலுக்கு வந்துள்ளதாக’ கூறினார்.
தங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த முடிவை பின்பற்றுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரெஞ்ச் பியர்ட் மற்றும் இங்கிலிஷ் பியர்ட் அகியவை இஸ்லாம் மதத்துக்கு எதிரானது என கூறியுள்ள ஷெரிப், " நாங்கள் இஸ்லாமியர்கள். இஸ்லாம் நெறிமுறைகளை பின்பற்றுபவர்கள். பிரெஞ்ச் பியர்ட் மற்றும் இங்கிலிஷ் பியர்ட் வேண்டும் என்பவர்கள் எங்கள் சலூன்களுக்கு வர வேண்டாம்" என்கிறார்.
மிரட்டல் அல்லது ஏதாவது அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, " இஸ்லாம் அறிஞர்களுடன் மேற்கொண்ட நீண்ட நெடிய ஆலோசனைகளுக்கு பிறகே, பிரெஞ்ச் பியர்ட் மற்றும் இங்கிலிஷ் பியர்ட் அகியவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எந்த அழுத்தமோ மிரட்டலோ இல்லை" என அவர் பதிலளித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் அதில்கான், மற்ற முடித்திருத்தும் தொழிலாளர் சங்கள் இந்த முடிவு பற்றி புரளி பரப்பி வருவதாகக் கூறினார். பாகிஸ்தானில் உள்ள வெளிநாட்டினர், குறிப்பாக சீனர்களிடம் இந்த முடிவு பற்றி தவறான கருத்துக்களை பரப்புவதாக அவர் தெரிவித்தார்.
"இஸ்லாம் நெறிமுறைகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினால் பாகிஸ்தானில் உள்ள வெளிநாட்டினருக்கு எந்த பாதிப்பும் இல்லை", என அதில்கான் விளக்கமளித்தார்.
இதற்கிடையே, பிரெஞ்ச் பியர்ட் மற்றும் இங்கிலிஷ் பியர்ட் அகியவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டினர் பாதிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு முடித்திருத்த தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரான அசிம்லாலா குற்றஞ்சாட்டியுள்ளார்.
கைபர் - பகுன்வா மாகாணத்தில் உள்ள பல மாவட்டங்களில், நாகரீகமாக தாடி வைத்துக்கொள்ள அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் ஏற்கனவே தடைவிதித்துள்ளன. சுவாபி, புனர், கீழ் தீர், சுவாத், மார்தன் உள்ளிட்ட மாவட்டங்களில் இதுதொடர்பாக ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
விதவிதமாக தாடி வைத்துக்கொள்ள தடைவிதித்து, தேரா காஸி மாவட்டத்தில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications