For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக். பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பதில் சிக்கல்.. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க திட்டம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. பிரதமராக பதவியேற்கும் விழா வரும் 11ம் தேதி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சிறிய கட்சிகளின் புதிய புதிய நிபந்தனைகளை இம்ரான்கான் பதவியேற்பதில் சிக்கல் நிலவுகிறது.

எதிர்க்கட்சிகள் இணைந்து அரசு அமைக்க முயற்சிகளும் நடந்து வருகின்றன. பெனாசிர் மகன் பிலாவலின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க தீர்மானித்துள்ளன.

Pakistan: Imran Khans oath-taking ceremony may be postponed due to alliance issue

நாடாளுமன்ற சபாநாயகர் பதவியை பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு வழங்க இக் கட்சிகள் முடிவு செய்துள்ளன. பிரதமர் பதவிக்கு நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியில் இருந்தும், துணை சபாநாயகர் எம்எம்ஏ (Muttahida Majlis-s-Amal) கட்சியிலிருந்தும் நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கானின், பாகிஸ்தான் தெரீக் இ-இன்சாப் கட்சி 117 இடங்களில் வெற்றி பெற்றது. அங்கு ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மைக்கு 137 இடங்கள் தேவை என்ற நிலையில் சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க இம்ரான்கான் கட்சி முடிவு செய்திருந்தது.

ஆனால் எதிர்க்கட்சிகள் சிறிய கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைக்க முயன்று வரும் நிலையில் இம்ரான் கானின் பதவியேற்பு அழைப்பிதழை தெரீக் இ-இன்சாப் கட்சி திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.

English summary
Political parties aligned against Pakistan Tehreek-e-Insaf (PTI) finalised names for their candidates for the posts of prime minister, speaker and deputy speaker of the National Assembly, a senior member of the alliance confirmed Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X