For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்ம கூட பேசாட்டி இந்திய தூதர் நமக்கு எதுக்கு? கூப்பிடுங்க நம்ம தூதரையும்.. பாக் அமைச்சர் ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவுக்கு எதிராக 5 முக்கிய முடிவை எடுத்த பாகிஸ்தான்- வீடியோ

    இஸ்லாமாபாத்: நம்முடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முன்வராவிட்டால் அந்நாட்டு தூதர்கள் நமக்கு எதுக்கு என்று பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சவுத்ரி கேள்வி எழுப்பி உள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு நீண்டகாலமாக குடைச்சல் கொடுத்து வருகிறது. ஜ்ம்மு காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்பதற்காக பிரிவினைவாதிகள் மூலம் பல்வேறு தீவிரவாத சம்பவங்களை பாகிஸ்தான் அரங்கேற்றி வந்தது.

    Pakistan Minister Fawad Chaudhary demand withdraw envoy from india

    இப்போது ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இருப்பதால் பாகிஸ்தான் இந்தியா மீது உச்சகட்ட கோபத்தில் உள்ளது. அந்த கோபத்தை அந்நாட்டு தலைவர்கள் பலரும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    சிரித்த முகத்தோடு கம்பீரமான கருணாநிதி சிலை.. முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்தார் மமதா பானர்ஜி சிரித்த முகத்தோடு கம்பீரமான கருணாநிதி சிலை.. முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்தார் மமதா பானர்ஜி

    அந்த வகையில் பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சௌத்ரி பேசுகையில், "நான் நம்முடைய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முக்கிய வேண்டுகோள் வைக்கிறேன். நம்முடன் இந்தியா பேச்சுவார்தை நடத்த முன்வராவிட்டால் எதற்கு தூதுவர்கள். நாம் நாட்டில் இந்திய தூதர்களும், இந்தியாவில் பாகிஸ்தான் தூதர்களும் இருப்பதால் என்ன பயன்? எனவே இந்திய தூதரை அந்நாட்டுக்கு திரும்பி அனுப்புங்கள். நம் தூதரை பாகிஸ்தானுக்கு திரும்ப பெறுங்கள்" இவ்வாறு கூறினார்.

    English summary
    Pakistan Minister Fawad Chaudhary: I request the Foreign Minister, when India is not interested in talking to us then why is their envoy still here?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X