அணு எரிபொருளுடன் பறக்கும் ரஷ்யா விமானம்.. அனுமதி மறுத்த பாகிஸ்தானால் அலறும் வங்கதேசம்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: வங்கதேசம் கடும் மின்தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் வங்கதேசத்துக்கு உதவ அணு எரிபொருளுடன் பறந்து வரும் ரஷ்ய விமானம் தங்களின் வான்வெளி பறக்க கூடாது என்று பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது. இது வங்கதேசத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

pakistan-not-allowed-airspace-for-russian-flight-carrying-banlgadesh-nuclear-fuel

அண்டை நாடான வங்கதேசம் இன்னும் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெறவில்லை. அந்த நாடு தனக்கான தேவையான மின்சாரத்தின் ஒரு பகுதியை நம் நாட்டிடம் இருந்து தான் வாங்கி வருகிறது.

இதனால் அந்த நாட்டில் மின்சார பற்றாக்குறை அதிகமாக உள்ளது. குறிப்பாக கோடை காலங்களில் மின்வெட்டு மணிக்கணக்கில் இருக்கும். தற்போதும் வங்கதேசத்தில் மின்வெட்டு பிரச்சனை அதிகரித்துள்ளது.

இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றால் வங்கதேசம் தனது ரூப்பூர் அணு மின் திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும். வங்கதேசத்தை பொறுத்தவரை எந்த அணு மின் திட்டமும் கிடையாது. ரூப்பூர் தான் முதல் அணுமின் திட்டமாகும்.

இந்த திட்டத்தை ரஷ்ய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.அணுமின் நிலையத்தில் ரியாக்டர் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை மேற்கொள்ளும் பணியை ரஷ்யா நாட்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதாவது ரஷ்ய அரசுக்கு சொந்தமான அணு கழகமான ரோஷட்டம் (Rosatom) இன்ஜினியரிங் பிரிவு அட்மேனர்கோமாஷ் (Atomenergomash) சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த அணுமின் நிலையம் என்பது தலைநகர் டாக்காவில் இருந்து வடமேற்கில் 160 கிலோமீட்டர் தொலைவில் பாப்னா மாவட்டத்தில் பத்மா நதிக்கரையில் இஷ்வர்தி உபாசிலாவில் அமைக்கப்பட்டு வருகிறது. பணி முழுவதுமாக முடியவில்லை. வங்கதேசத்தில் மின்பற்றாக்குறையை தீர்க்க இந்த ரூப்பூர் அணுஉலை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

இந்த அணுமின் நிலையத்தின் 2 யூனிட்டுகளை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பணி நடந்து வருகிறது. தற்போது முதல் யூனிட்டில் அணு எரிபொருள் ஏற்றப்பட்டு சோதனைக்கு தயாராக உள்ளது. 2வது யூனிட்டுக்கு தேவையான அணு எரிபொருள் ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட வேண்டும்.
அணு உலைக்கான எரிபொருளை ஏற்றி வரும் ரஷ்ய விமானம் அஜர்பைஜான், கஜகஸ்தான், பாகிஸ்தான், இந்தயிா வழியாக தான்வங்கதேசம் செல்ல வேண்டும்.

ஆனால் தற்போது ரஷ்ய விமானம் தங்களின் வான்வெளி பரப்பை பயன்படுத்த கூடாது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனால் ரஷ்யாவில் இருந்து வங்கதேசத்தின் அணுமின் நிலையத்துக்கு ேவையான யுரேனியம் எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்த திட்டத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 24ம் தேதியே ரஷ்யாவில் இருந்து வர வேண்டிய அணு எரிபொருள் இன்னும் வங்கதேசம் செல்லவில்லை. இது வங்கதேசத்துக்கு புதிய பிரச்சனையாக மாறி உள்ளது.

மேலும் பாகிஸ்தான் திடீரென்று ரஷ்ய விமானம் வான்வெளி பாதையை பயன்படுத்த அனுமதி மறுத்ததன் பின்னணி பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி வங்கதேசத்தின் அணுசக்தி கழகமும் சரியான விளக்கத்தை அளிக்கவில்லை.

வங்கதேசம்,பாகிஸ்தானில் இருந்து தான் தனி நாடானது. 1972ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் இருநாடுகள் இடையே கொஞ்சம் இணக்கமான சூழல்உள்ளது. இதற்கிடையே தான் வங்கதேசத் அணுமின் திட்டத்தை முடக்கும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டு வருவதால் அந்த நாடு அதிருப்தியடைந்துள்ளது.

வங்கதேசத்தில் ரூப்பூர் அணுமின் நிலைய பணிகள் முழுவதுமாக முடிந்து செயல்பாட்டு வரும்போது ஆண்டுக்கு 16 பில்லியன் (ஒரு பில்லியின் என்பது 100 கோடி) யூனிட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்க முடியும். இது வங்கதேசத்தின் மின்பற்றாக்குறையை போக்க பெரிய அளவில் கைக்கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+