"சாரி , உண்மையைச் சொல்கிறேன்.." இஸ்லாமோஃபோபியா குறித்து இம்ரான் கான் பரபர பேச்சு.. பின்னணி
இஸ்லாமாபாத்: இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர், அதிகரித்த இஸ்லாமோஃபோபியா குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அவரது கட்சியிலேயே எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இம்ரான் கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்கவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்லாமோஃபோபியா குறித்தும் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் அதை இஸ்லாமிய நாடுகள் எப்படிக் கையாண்டன என்பது குறித்து இம்ரான் கான் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான்
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், "அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு தான் உலகில் இஸ்லாமோஃபோபியா வளர்ந்தது. இது தொடர்பாக உலக நாடுகள் மத்தியில் பரவும் கருத்து உருவாக்கம் தொடர்பாக முஸ்லீம் நாடுகள் எதுவும் செய்யாததால், அது கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இதுபோன்ற கருத்து உருவாக்கம் பரவுவதைத் தடுக்க இஸ்லாமிய நாடுகள் எதுவும் செய்யவில்லை. இது தொடர்பாக மக்களிடையே இருக்கும் நம்பிக்கைக்கும் களத்தில் இருந்து பயங்கரவாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இரட்டை கோபுர தாக்குதல்
விளையாட்டு வீரராக இருந்த போது, எனது வாழ்நாளில் குறிப்பிட்ட பகுதியை நான் இங்கிலாந்தில் கழித்துள்ளேன். சர்வதேச விளையாட்டு வீரராக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். பெரும்பாலான மக்களை விட மேற்கத்திய நாகரீகத்தை நான் நன்றாகப் புரிந்து கொள்கிறேன். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு தான் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு அதிகரித்து வந்ததை உணர முடிந்தது. இந்த உணர்வு அந்த தாக்குதலுக்குப் பின்னர் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

முஸ்லீம் நாடுகள்
இதைச் சொல்ல நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், இஸ்லாமோஃபோபியா தொடர்ந்து வளர்ந்து வந்தது, காரணம் முஸ்லீம் நாடுகள் தான். அவர்கள் இந்த கருத்து உருவாக்கத்தைச் சரிபார்க்கத் தவறிவிட்டனர். எந்த மதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எப்படி தொடர்பு இருக்கும்? இஸ்லாம் எப்படி பயங்கரவாதத்துடன் தொடர்புப்படுத்தப்பட்டது? இந்தச் சம்பவம் நடந்த பின்னர், மேற்கத்திய நாட்டில் ஒரு மனிதனை அவர்கள் எப்படி மிதவாத முஸ்லீம் மற்றும் தீவிர முஸ்லீம் என்று வேறுபடுத்துகிறார்கள். இதற்காக மசூதிக்குள் நுழைந்து ஒருவர் அனைவரையும் சுட்டுக் கொல்வது சரியா" என்று 2019இல் நடந்த கிறிஸ்ட்சர்ச் மசூதி துப்பாக்கிச் சூட்டைக் குறிப்பிட்டுப் பேசினார்.

முடிவு எடுக்கவில்லை
இம்ரான் கான் மேலும் கூறுகையில்"துரதிர்ஷ்டவசமாக, என்ன செய்திருக்க வேண்டுமோ, அதைச் செய்யவில்லை. முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் இது குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும். ஆனால் நிறைய நாடுகளின் தலைவர்கள் தங்களை மிதவாதிகள் என்று காட்டிக் கொண்டனர். ஆனால் அது தொடர்பாக அவர்கள் எந்தவொரு குறிப்பிட தகுந்த முடிவையும் எடுக்கவில்லை" என்று அவர் மேலும் கூறினார். சர்வதேச அளவில் இஸ்லாமோஃபோபியா அதிகரிக்க முஸ்லீம் நாடுகளே காரணம் என இம்ரான் கான் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
-
2288-ஆம் ஆண்டில் டைம் டிராவல் சாத்தியம்! 5079-ல் உலகம் அழியும்! அதிர வைக்கும் பாபா வங்கா கணிப்பு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications