For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விண்ணில் ஏது இந்தியா, பாகிஸ்தான் பிரச்சினை?.. இஸ்ரோவை பாராட்டிய பாக். விண்வெளி வீராங்கனை

Google Oneindia Tamil News

Recommended Video

    Namira Salim congratulates ISRO on Chandrayaan 2

    இஸ்லாமாபாத்: சந்திரயான்-2 திட்டம் உண்மையிலேயே தெற்காசியாவுக்கு அசுர வளர்ச்சிக்கானதாகும் என பாகிஸ்தானின் முதல் பெண் விண்வெளி வீரர் நமீரா சலீம் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

    தென் துருவத்தை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்பிய நாடுகள் 3 நாடுகள் மட்டுமே உள்ளன. அவை அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகியவை ஆகும். இந்த பட்டியலில் இந்தியாவும் இடம்பெற நீண்ட காலமாக போராடி சந்திரயான் 2 என்ற விண்கலம் மூலம் அதை சாதிக்க திட்டமிட்டது.

    அதன்படி சந்திரயான் 2 விண்கலம் பல்வேறு விஞ்ஞானிகளின் வியர்வையால் உருவாகி கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

    விக்ரம் லேண்டர் இருக்குமிடம் தெரிந்தாலும் அதிலிருந்து எந்த சிக்னலும் வரவில்லை- இஸ்ரோவிக்ரம் லேண்டர் இருக்குமிடம் தெரிந்தாலும் அதிலிருந்து எந்த சிக்னலும் வரவில்லை- இஸ்ரோ

    தரையிறங்க முயற்சி

    தரையிறங்க முயற்சி

    இதில் பல்வேறு செயல்பாடுகள் நடந்தன. இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்றது. இதையடுத்து அந்த லேண்டர் செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை நிலவில் இறங்கும் என திட்டமிடப்பட்டது.

    லேண்டரின் இணைப்பு

    லேண்டரின் இணைப்பு

    அவ்வாறு லேண்டர் மென்மையான முறையில் தரையிறங்குவதற்காக அதன் வேகத்தையும் தூரத்தையும் கணிசமாக குறைந்து வந்தனர் விஞ்ஞானிகள். இந்த நிலையில் நிலவில் தரையிறங்கும் இடத்திற்கு 2.1 கி.மீ தூரத்தில் இருந்த லேண்டரின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    டுவிட்டர் பக்கம்

    டுவிட்டர் பக்கம்

    இதனால் லேண்டர் தரையிறங்கியதா என்பது தெரியாமல் விஞ்ஞானிகள் மனவேதனை அடைந்தனர். இதை கிண்டல் செய்யும் விதமாக பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, பொம்மை சந்திரனில் தரையிறங்குவதற்கு பதிலாக மும்பையில் இறங்கிவிட்டது. போய் தூங்குங்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார்.

    95 சதவீத பணிகள்

    95 சதவீத பணிகள்

    இதற்கு இந்தியாவிலிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. எனினும் அதை காட்டிலும் பாகிஸ்தான் மக்களே அந்நாட்டு அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே சாதித்த நாடுகள் பல முறை முயன்ற பிறகே நிலவுக்கு சென்றுள்ளது. ஆனால் இந்தியாவோ முதல் முயற்சியிலேயே 95 சதவீத பணிகளில் வெற்றி கண்டது.

    விண்வெளி வீராங்கனை

    விண்வெளி வீராங்கனை

    இந்தியாவை கிண்டல் செய்வதை விட்டு இந்தியா அளவுக்கு பாகிஸ்தானை முன்னேற்றும் வழியை பாருங்கள் என நெட்டிசன்கள் பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை நமீரா சலீம் இஸ்ரோவை பாராட்டியுள்ளார்.

    தெற்காசியா

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் நிலவின் தென்துருவத்தில் மென்மையாக லேண்டரை தரையிறக்கும் வரலாற்று முயற்சியை செய்த இந்தியா மற்றும் இஸ்ரோவுக்கு எனது பாராட்டுகள். நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2வால் தெற்காசியாவே அசுர வளர்ச்சி பெறும்.

    ஒட்டுமொத்த உலகத்துக்கே

    ஒட்டுமொத்த உலகத்துக்கே

    இது இந்தியாவுக்கு மட்டும் பெருமை அல்ல. ஒட்டுமொத்த உலக விண்வெளி துறையையுமே பெருமிதம் கொள்ள வைக்கும் முயற்சியாகும். தெற்காசியாவில் விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் அளப்பறியது. விண்வெளித் துறையில் இந்தியா முன்னேறி வருவதை யாரும் மறுக்க முபடியாது.

    பாராட்டு

    பாராட்டு

    அரசியல் மனமாச்சரியங்கள் அனைத்தும் விண்வெளியில் காணாமல் போகிறது. அது போல் பூமியிலும் இந்தியா, பாகிஸ்தான் இடையே எந்த பிரச்சினையும் இல்லாமல் போகும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் போரையும் பிரச்சினைகளையும் மறந்து இஸ்ரோவை பாராட்டிய வீராங்கனையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    English summary
    Pakistan's first female astronaut Namira Salim congratulates ISRO on Chandrayaan 2 saying its a giant leap for south asia.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X