For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு.. காலில் தாக்கிய குண்டுகள்.. இனி 3 வாரத்திற்கு நடக்க முடியாது!

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இம்ரான்கானின் காலில் குண்டு பாய்ந்துள்ள நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக இம்ரான் கான் காலில் அடிபட்டு உள்ளது. இதனால் அவர் 3 வாரம் நடக்க மாட்டார் என்று மருத்துவமனை தெரிவித்து உள்ளது.

இம்ரான் கான் காலில் பாய்ந்த குண்டு.. கண் இமைப்பதற்குள் மளமளவென சுட்டுதள்ளிய நபர்.. நடந்தது என்ன?இம்ரான் கான் காலில் பாய்ந்த குண்டு.. கண் இமைப்பதற்குள் மளமளவென சுட்டுதள்ளிய நபர்.. நடந்தது என்ன?

துப்பாக்கிச்சூடு

துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தானின் வஜிராபாத்தில் உள்ள ஜாபர் அலி கான் சவுக் அருகே இம்ரான்கான் பிராசாரம் மேற்கொண்டிருந்தார். லாகூரில் கடந்த வாரம் தொடங்கிய இந்த பிரசாரம் இஸ்லாமாபாத் வரை பயணிக்கிறது. இந்நிலையில் வஜ்ராபாத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இம்ரான்கான் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக பயணித்துக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் இம்ரான்கானின் கான்வாயை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

இதில்கானின் காலில் குண்டு பாய்ந்துள்ளது. பாதுகாப்பு வீரர்கள் உடனடியாக இம்ரான் கானை பிரசார வாகனத்திலிருந்து பாதுகாப்பு வாகனத்திற்கு மாற்றியுள்ளனர். பின்னர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும் தற்போது இம்ரான்கான் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் காயமடைந்துள்ளனர். இது திட்டமிட்ட கொலை முயற்சி என இம்ரான்கானின் 'பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்' கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கொலை

கொலை

வரின் காலில் துப்பாக்கி குண்டு தாக்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் 3 வாரம் நடக்க மாட்டார் என்று மருத்துவமனை தெரிவித்து உள்ளது. ஆனால் அவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது இல்லை. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானில் அரசியல் தலைவர்கள் இவ்வாறு பொது வெளியில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2007ம் ஆண்டு அப்போதைய அரசியல் தலைவரான பெனாசீர் பூட்டோ இதேபோன்ற ஒரு தாக்குதல் சம்பவத்தில்தான் பலியானார். இ

பூட்டோ

பூட்டோ

அப்போதைய காலத்தில் பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு இருந்தது. முழுக முழுக மதத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட அந்நாட்டில் பெண்கள் அரசியலுக்கு வந்தால் கொல்லப்படுவார்கள் என்று வெளிப்படையாகவே எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையெல்லாம் கடந்து பிரதமர் தேர்தலில் போட்டியிட இருந்த அவர் ராவல்பிண்டியில் ஒரு பேரணியில் பங்கேற்றிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அதேபாணியில் இம்ரான்கான் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாக அவரின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

English summary
Ex-Prime Minister Imran Khan was shot at while campaigning in Pakistan. In this incident, Imran Khan's leg was hit by a bullet and he is currently undergoing treatment in the hospital. In this case, news has emerged that the person involved in the shooting incident has been shot dead by the security officials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X