For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2500 பழமையான நடனமாடும் சிறுமி சிலை... இந்தியாவிடமிருந்து திரும்பப் பெற பாக். முயற்சி

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: இந்தியா வசம் உள்ள தங்களது பளிங்கு சிலை ஒன்றை மீண்டும் தங்களது நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது பாகிஸ்தான்.

இந்தியா-பாகிஸ்தான் இணைந்து ஒன்றாக இருந்த காலத்தில் டெல்லியில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றிற்காக பாகிஸ்தான் பகுதியில் இருந்து இரண்டு சிலைகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. அவற்றில் ஒரு சிலை மட்டும் தொடர்ந்து இந்தியா வசம் உள்ளது.

நடனமாடும் சிறுமி என்ற அந்த 10.8 செ.மீ. உயரம் உடைய வெண்கல சிலையை இந்தியாவிடம் இருந்து திரும்பப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது பாகிஸ்தான்.

2500 ஆண்டுகள் பழமையானது....

2500 ஆண்டுகள் பழமையானது....

இந்த நடனமாடும் சிறுமி சிலை கிறிஸ்து பிறப்பதற்கு 2500 ஆண்டுகள் முன்பாக வடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சிலை கடந்த 1946ம் ஆண்டு டெல்லியில் நடந்த கண்காட்சி ஒன்றிற்காக மொகஞ்சதாரோவில் இருந்து கொண்டு வரப்பட்டது.

பிரீஸ்ட் கிங் சிலை....

பிரீஸ்ட் கிங் சிலை....

இந்த நடனமாடும் சிலையுடன் பிரீஸ்ட் கிங் என்ற பளிங்கு சிலையும் டெல்லி கொண்டு வரப்பட்டது. ஆனால், மீண்டும் அச்சிலை பாகிஸ்தானுக்கு திருப்பி அளிக்கப் பட்டு விட்டது.

மீட்கும் முயற்சி....

மீட்கும் முயற்சி....

இந்நிலையில் தற்போது மீதமுள்ள இந்த நடனமாடும் சிறுமி சிலையை திரும்ப பாகிஸ்தானுக்கு கொண்டு வரும் முயற்சியில் அந்நாட்டு சிந்து மாகாண அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக உதவும்படி நவாஸ் ஷெரீப் அரசை அது நாடி உள்ளது.

சிந்து விழா....

சிந்து விழா....

மொகஞ்சதாரோவில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ, சிந்து விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், நடனமாடும் சிறுமி சிலை பற்றிய கோரிக்கையை சிந்து மாகாண அரசு எழுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
As Bilawal Bhutto-Zardari’s Sindh Festival has turned people’s attention towards the culture and civilisation of Sindh, the provincial government is sending a request to Islamabad for asking India to return the famous statue of the Dancing Girl, which is in possession of the Indian authorities since 1946.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X