ஐஎஸ்ஐ முன்னாள் தலைவரை கைது செய்தது பாகிஸ்தான் ராணுவம்.. கஸ்டடியில் விசாரணை!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ முன்னாள் தலைவர் ஃபைஸ் ஹமீதுவை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ சட்டத்தை மீறியதாக ஐ.எஸ்.ஐ முன்னாள் தலைவர் ஃபைஸ் ஹமீது கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஃபைஸ் ஹமீதுவிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறை தலைவர் ஃபைஸ் ஹமீத், ஒருகாலத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். இந்நிலையில், முறைகேடு புகார் தொடர்பாக ஃபைஸ் ஹமீதை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் ராணுவம், அவர் மீது இராணுவ நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளது.

ஓய்வுக்குப் பின் பாகிஸ்தான் ராணுவ சட்டத்தை மீறும் வகையில் ஃபைஸ் ஹமீது பல செயல்களில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக விசாரணை தொடங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவச் சட்டத்தின் விதிகளின் கீழ் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என ஐஎஸ்பிஆர் தெரிவித்துள்ளது.
ஒருகாலத்தில் பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நபராக விளங்கியவர் ஃபைஸ் ஹமீது. அப்போதைய ஐஎஸ்ஐ தலைவரும் தற்போதைய இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் மீது பிரதமராக இருந்த இம்ரான் கான் அதிருப்தியில் இருந்த நிலையில், அவர் நீக்கப்பட்டு ஹமீத் நியமிக்கப்பட்டார். ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீது, 2019 முதல் 2021 வரை ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவராக இருந்தபோது மிகவும் சக்திவாய்ந்தவராகக் கருதப்பட்டார்.
இதற்கிடையே, தற்போதைய இராணுவத் தளபதி முனீர் பதவியேற்ற பின்னர், தான் ஓய்வு பெறுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், நவம்பர் 2022இல் ஃபைஸ் ஹமீது முன்கூட்டியே ஓய்வு பெற்றார். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications