For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஹா இம்ரான்கானா இது.. காஷ்மீர் விவகாரத்தில் போர்.. பல்டி அடித்த பாகிஸ்தான்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Pakistan PM Imran Khan said in Lahore that War is not a solution for anything

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒரு போதும் இந்தியாவுடன் போர் தொடங்காது என பிரதமர் இம்ரான்கான் பல்டி அடித்துள்ளார்.

    காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு 2-ஆக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இந்த நிலையில் காஷ்மீரில் சீனா, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகள் பறிபோய்விடும் என இரு நாடுகளும் அலறுகின்றன.

    இதனால் உலக நாடுகள் முதல் ஐநா சபை வரை சென்று இருநாடுகளும் ஆதரவு திரட்ட முயன்றன. ஆனால் எந்த நாடும் இவர்களுக்கு ஆதரவாக இல்லை. மாறாக காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வு காண வேண்டும். இதில் மூன்றாவது நாடு தலையிட தேவையில்லை என்றே தெரிவித்து விட்டன.

    தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்.. உலகநாடுகளின் கவனத்தை ஈர்க்கும் தமிழகம்..!தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்.. உலகநாடுகளின் கவனத்தை ஈர்க்கும் தமிழகம்..!

    பாகிஸ்தான் பிரதமர்

    பாகிஸ்தான் பிரதமர்

    எனினும் இந்தியாவை எப்படியாவது பழித் தீர்க்க வேண்டும் என்று இரு நாடுகளும் கங்கனம் கட்டிக் கொண்டுள்ளன. இதன் எதிரொலியாக காஷ்மீர் விவகாரத்தை லேசில் விட மாட்டோம். போர் தொடுக்கவும் தயார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறைக்கூவல் விடுத்தார்.

    விமான தளம்

    விமான தளம்

    இந்த நிலையில் சீனாவின் ஜெ 10 மற்றும் பாகிஸ்தானின் ஜேஎஃப் 17எஸ் விமானங்கள் லே பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர் வடக்கே உள்ள ஹோட்டன் நகர வானில் போர் ஒத்திகையில் கடந்த வாரம் ஈடுபட்டன. அது போல் பாகிஸ்தானின் ஜேஎஃப்17 ரக விமானங்கள் பல்டிஸ்தான் பகுதியில் ஸ்கார்டு விமான தளம் வழியாக போர் ஒத்திகையில் ஈடுபட்டன.

    இரட்டை வேடம்

    இரட்டை வேடம்

    போருக்கு தயார் என இம்ரான்கானும் பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரும் இரட்டை வேடம் போட்டனர். இந்த நிலையில் லாகூரில் சீக்கிய மக்கள் மத்தியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார்.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    அவர் பேசுகையில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுமே அணு ஆயுதங்கள் கொண்ட நாடுகளாகும். இந்த 2 நாடுகளுக்கிடையில் பதற்றம் அதிகரித்தால் உலகமே அபாயத்தை எதிர்க் கொள்ளும்.

    காரணம்

    காரணம்

    எந்த பிரச்சினைக்கும் போர் ஒரு தீர்வாகாது என்பதை இந்தியாவுக்கு கூறிக் கொள்கிறேன். போரில் வெற்றி பெற்றவரே தோல்வியடைந்தவருமாவார். போர் பல புதிய பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துவிடும் என்று இம்ரான் கான் தெரிவித்தார்.

    போர் தீர்வாகாது

    போர் தீர்வாகாது

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை, போருக்கு தயார் என்றார் இம்ரான்கான். அது போல் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் காஷ்மீர் மீது இந்தியா எடுத்த நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார். தற்போது போர் தீர்வாகாது என பல்டி அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Pakistan PM Imran Khan said in Lahore that War is not a solution for anything. It will give birth to new problems.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X