For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தப்பு செஞ்சது நீங்க.. பிறகு எதற்கு இந்த டென்ஷன்.. இந்த கூத்தை பாருங்க!

விமானத்தை தவற விட்டதால் பெட்டிகளை பயணி கொளுத்தினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விமானத்தை தவறவிட்டதால் பயணி ஆத்திரம்-வீடியோ

    இஸ்லாமாபாத்: முழு தப்பையும் தன்மேலேயே வெச்சுக்கிட்டு ஆத்திரப்படறது என்ன பிரயோஜனம்? அப்படித்தான் இவரும் செஞ்சிருக்காரு.

    விமானத்தை தவறவிட்டதால் பயணி ஒருவர் மிகவும் டென்ஷனாகி தான் கொண்டுவந்த பெட்டியை, விமானத்தை தவறவிட்ட ஏர்போர்ட்டிலேயே வைத்து கொளுத்தியுள்ள சம்பவம் இணையத்தில் வீடியோவாக பற்றிய நெருப்பு போல பரபரப்பாகி வருகிறது.

    இஸ்லாமாபாத் ஏர்போர்ட்டுக்கு ஒருத்தர் அவசர அவசரமா பெட்டியும் கையுமாக ஓடிவந்தார். இஸ்லாமாபாத்திலிருந்து கில்ஜித் பகுதிக்கு அவர் போக வேண்டியிருந்தது.

    தவற விட்டார்

    தவற விட்டார்

    ஆனால் ஏர்போர்ட்டுக்கு தாமதமாக வந்துவிட்டார். சரியான நேரத்துக்கு அவர் போக வேண்டிய ஃபிளைட் கிளம்பி சென்றுவிட்டது. மூச்சிறைக்க ஓடிவந்த இந்த பயணி, ஃபிளைட் கிளம்பி போய்விட்டதை அறிந்து ஏமாற்றம் ஆகிவிட்டார்.

    நெருப்பை பற்ற வைத்தார்

    நெருப்பை பற்ற வைத்தார்

    அதோடு டென்ஷனும் தலைக்கு ஏறியது. ஃபிளைட் மிஸ் பண்ண ஆத்திரத்தில், கையிலிருந்த பெட்டி படுக்கைகளை கீழே பொத்தென்று போட்டார். பிறகு அந்த லக்கேஜ்கள் மீது நெருப்பை பற்ற வைத்து கொளுத்திவிட்டார்.

    பயணி ஆத்திரம்

    பயணி ஆத்திரம்

    இவர் இப்படி கொளுத்தி கொண்டிருப்பதை பார்த்ததும் அங்கிருந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஓடி வந்து பயணியை தடுத்தனர். ஆனாலும் அவர்களை எல்லாம் தள்ளிவிட்டு, கொண்டு வந்த எல்லாத்தையுமே எரித்து விட்டார். அப்போதும் பயணிக்கு ஃபிளைட் போய்விட்ட ஆத்திரம் தீரவே இல்லை.

    வீடியோ வைரல்

    அதற்கு பிறகு அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தி, எரிந்து கொண்டிருந்த லக்கேஜை கொஞ்சமாவது மீட்டனர். ஏர்போர்ட்டுக்கு இவர் வந்ததே லேட்டு.. ஃபிளைட்டை இவர் தவறவிட்டுவிட்டு கோபத்தில் அவர் லக்கேஜை அவரே எரித்த சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது.

    English summary
    Pakistani man sets his own luggage on fire after flight gets cancelled
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X