மோசமாகும் பாகிஸ்தான் நிலைமை.. இனி ஒன்றுமே செய்ய முடியாது.. இந்தியா அடித்த பெரிய ‛ஆப்பு’
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானுக்கான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் கிடைக்காமல் போய் உள்ளது. பாகிஸ்தானில் அங்கு காரீப் பருவகாலம் தொடங்கி உள்ள நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட உள்ளனர்.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுது்து பாகிஸ்தானுக்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. அதன்படி பாகிஸ்தானுக்கான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

கடந்த 1960ம் ஆண்டில் உலக வங்கி முன்னிலையில் நம் நாடும், பாகிஸ்தானுக்கும் இடையே சிந்து நதி நீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி சிந்து ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை இருநாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு கிழக்கு பகுதி ஆறுகள் (ரவி, பியாஸ், சட்லெஜ் - 30% நீர்), பாகிஸ்தானுக்கு மேற்கு பகுதி ஆறுகள் (சிந்து, ஜீலம், செனாப் - 70% நீர்) ஒதுக்கப்பட்டன. இதன்மூலம் சிந்து நதி நீரால் பாகிஸ்தானில் விவசாயம் செழித்தது. மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியானதோடு, நீரில் இருந்து மின் உற்பத்தியும் தயாரிக்கப்பட்டது. தற்போது சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளதால் பாகிஸ்தானுக்கு தண்ணீர் கிடைக்காமல் உள்ளது.
பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகை 24 கோடி என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் சுமார் 22 கோடி பேர் சிந்து நதி நீரை நம்பி இருந்தனர். அவர்களின் வாழ்வாதாரம் மெல்ல பாதிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் சிந்து நதி நீர் நிறுத்தத்தால் பாகிஸ்தான் எதிர்கொள்ளும் பிரச்சனை பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜூன் இரண்டாம் வாரம் வரையிலான காரீஃப் பருவத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 21 சதவீத நீர் பற்றாக்குறை இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேபோல் இன்னும் 2 வாரங்கள் வரை பாகிஸ்தானில் வெப்பம் என்பது அதிகரிக்க உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பலுசிஸ்தானிலும் வெப்ப அலைகள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு இயல்பை விட ஆறு டிகிரி அதிகமாக வெப்பநிலையை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சிந்து மாகாணத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானுக்கு கூடுதல் தலைவலியாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் சிந்து நதி அமைப்பு ஆணையத்தின் அறிக்கையின்படி, ஜூன் 5 ஆம் தேதி சிந்து நதிப் படுகையிலிருந்து அணைகளுக்கு 124,500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இது கடந்த ஆண்டில் 144,000 கனஅடி நீராக இருந்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது பாகிஸ்தானில் காரீப் பருவ காலம் தொடங்கி உள்ளது. இந்தியாவின் தண்ணீர் நிறுத்தத்தால் அந்த காரீப் பருவ சாகுபடி பெரியளவில் பாதிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக மத்திய நீர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏகே பஜாஜ் கூறுகையில், ‛‛பாகிஸ்தானில் சிந்து நதி அமைப்புடன் இணைக்கப்பட்ட ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குறைவான நீர் உள்ளது. இதனால் விவசாயிகள் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள உள்ளனர். காரீப் பயிர்களை விதைக்கும் பணி பாகிஸ்தானில் நடந்து வருகிறது. சிந்து நதி நீர் இல்லாவிட்டால் இந்த பருவ சாகுபடி பெரிதும் பாதிக்கப்படும்.
பாகிஸ்தானை எடுத்து கொண்டால் பருவமழை என்பது ஜூன் மாதம் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் தான் தொடங்கும். இதனால் அதுவரை பாகிஸ்தான் பெரிதும் பாதிக்கப்படும்'' என்றார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications