Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அழகி முதல் 60 வயது வரை 5 திருமணம்... பாக்., புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பற்றிய பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷேபாஸ் ஷெரீப் தேர்வாகி உள்ளார். இவர் மொத்தம் 5 திருமணங்களை செய்துள்ளார். இதில் காதல் மனைவியான மாடல் அழகியின் வீட்டுக்கு பாலம் அமைத்து கொடுத்து சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் செயல்பட்டு வந்தார். அவருக்கு அளித்த ஆதரவை கூட்டணி கட்சியினர் மற்றும் அவரது கட்சி எம்பிக்கள் திரும்ப பெற்றனர்.

இதனால் நாடாளுமன்றத்தில் இம்ரான்கானின் பெரும்பான்மை குறைந்தது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதில் இம்ரான்கான் தோல்வி அடைந்தார்.

புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்

புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்

இதையடுத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவராக உள்ள ஷேபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்வாகி உள்ளார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஆவார். இவருக்கு வயது 70 ஆகும். இவர் இம்ரான்கானை விட ஒரு வயதில் மூத்தவராக உள்ள நிலையில் திருமண வாழ்க்கையை பொறுத்தவரை இம்ரான்கானை விட இரண்டு படிகள் முன்னால் உள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் 3 திருமணங்கள் செய்திருந்த நிலையில் ஷேபாஸ் ஷெரீப் மொத்தம் 5 திருமணங்கள் செய்துள்ளார்.

திருமண வரலாறு

திருமண வரலாறு

இவரது திருமணங்களின் பின்னணியில் பல சம்பவங்கள் நடந்துள்ளது. தற்போது 2 மனைவிகளுடன் வசித்து வரும் ஷேபாஸ் ஷெரீப் திருமணத்தால் அண்ணனான நவாஷ் ஷெரீப்புடன் மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் காதல் மனைவியின் வீட்டுக்கு விரைவாக செல்ல ஷேபாஸ் ஷெரீப் பாலம் அமைத்தும் கொடுத்த வரலாறும் உள்ளது.

முதல் திருமணம்

முதல் திருமணம்

பாகிஸ்தான் பிரதமராக தேர்வாகி இன்று செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் இடம்பிடித்துள்ள ஷேபாஸ் ஷெரீப் திருமணத்துக்கு மிகவும் பெயர்பெற்ற பாகிஸ்தான் அரசியல்வாதியாவார். இவர் முதன் முதலில் பேகம் நுஸ்ரத் ஷாபாஸ் என்பவரை 1973ல் திருமணம் செய்தார். 1993ல் அவர் இறந்தார். இதனால் இவருடனான 20 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இந்த தம்பதிக்கு சல்மான், ஹம்சா, இரட்டை குழந்தைகளான ஜாவிரியா, ரபியா என 4 குழந்தைகள் பிறந்தன.

2வது திருமணம்

2வது திருமணம்

இதையடுத்து அவர் மாடல் அழகியான அலியா ஹனியை காதலித்து 1993ல் திருமணம் செய்தார். இந்த திருமணத்துக்கு நவாஸ் ஷெரீப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அலியா ஹனியை விவாகரத்து செய்ய அவர் வலியுறுத்தினார். இதற்கு ஷேபாஸ் ஷெரீப் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அண்ணன்-தம்பி இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

மனைவி வீட்டுக்கு செல்ல பாலம்

மனைவி வீட்டுக்கு செல்ல பாலம்

இதற்கிடையே பஞ்சாப் மகாண ஆட்சியின்போது அலியா ஹனியின் வீட்டுக்கு வேகமாக செல்லும் வகையில் தனியாக ஷேபாஸ் ஷெரீப் பாலம் அமைத்தார். மேலும் அதற்கு ஹனி பாலம் என பெயரும் சூட்டினார். பிறகு கருத்துவேறுபாட்டால் அலியா ஹனியுடனான திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அலியா ஹனி சவுதி அரேபியாவில் இருந்த நிலையில் ஷேபாஸ் ஷெரீப் அவரை விவாகரத்து செய்தார். அதன்பின் சிறிது காலத்தில் அலியா ஹனி மர்மமான முறையில் இறந்தார்.

3 வது திருமணம்

3 வது திருமணம்

மேலும் அலியா ஹனியுடன் வாழ்க்கை நடத்தியபோதே ஷேபாஸ் நிலோபர் கோசா என்பவரை ஷேபாஸ் ஷெரீப் ரகசியமாக மணந்தார். மத்திய புலனாய்வு முகமை டிஜி தாரிக் கோசா மற்றும் நீதிபதி ஆசிப் சயீத் கோசா ஆகியோரின் சகோதரியான இவருடன் நடந்த திருமணமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் விரைவில் முடிவுக்கு வந்தது.

4, 5வது திருமணம்

4, 5வது திருமணம்

அதன்பிறகு 2003ல், பாகிஸ்தான் எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான தெஹ்மினா துரானி என்பவரை ஷேபாஸ் ஷெரீப் திருமணம் செய்தார். இருவருக்கும் பல ஆண்டுகளாக தொடர்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் இவர்களின் திருமணத்தை ஷேபாஸ் ஷெரீப் குடும்பத்தினர் ஏற்று கொண்டனர். அதன்பிறகு 2012ல் தனது 60 வயதில் அரசு அதிகாரியான கல்சும் ஹாய் என்பவரை ஷேபாஸ் ஷெரீப் ரகசியமாக கரம் பிடித்தார். இந்த திருமணத்தை இவர்கள் 2 பேரும் நீண்டநாட்களாக ஒப்புகொள்ளவில்லை.

2 மனைவிகள் அங்கீகரிப்பு

2 மனைவிகள் அங்கீகரிப்பு

இந்நிலையில் தான் ஷேபாஸ் ஷெரீப் நான்காவது மனைவி தெஹ்மினா துரானியுடன் வசித்து வருகிறார். ஷேபாஸ் ஷெரீப் மொத்தம் 5 பேரை திருமணம் செய்திருந்தாலும் கூட முதல் மனைவியான பேகம் நுஸ்ரத் ஷாபாஸ், நான்காம் மனைவி தெஹ்மினா ஆகியோர் மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஏற்று கொள்ளப்பட்டுள்ளனர். மீதமுள்ள அலியா ஹானி, நிலோபர் கோசா மற்றும் குல்சும் ஹாயே ஆகியோருடனான வாழ்க்கை உடனடியாக முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+