For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரான்ஸ், ஜெர்மனியில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத மழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா வில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாரீஸ் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை காரணமாக ஜெர்மனியில் 10 பேரும் பிரான்ஸில் 2 உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடு, உடைமைகளை இழந்துள்ளனர்.

Paris floods: Seine at 30-year high as galleries close

ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்துள்ளதாக கூறியுள்ள பிரான்ஸ் பிரதமர் மானுவேல் வால்ஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்.

கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் தத்தளித்தது போல இப்போது பாரிஸ், தெற்கு ஜெர்மனி பகுதிகள் தத்தளித்து வருகின்றன என்று சொன்னால் மிகையாகாது.

வரலாறு காணாத மழை

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மற்றும் அந்த நாட்டின் மத்திய, தென்கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. பாரீஸில் ஓடும் ஸுன் நதியின் இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. ஆற்றின் கரையில் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு நகருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

கொட்டும் கனமழை

மத்திய பிரான்ஸ் பகுதியில் உள்ள சோப்பீஸ் சர்லோயிங் நகரில் கனமழை பெய்து வருகிறது. அங்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களை காப்பாற்றக் கோரி தொலைபேசியில் உதவி கோரியுள்ளனர்.

நூற்றாண்டுகளில் இல்லாத மழை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர்கள், படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து பாரீஸ் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிரான்ஸில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஆய்வு

ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்துள்ளதாக கூறியுள்ள பிரதமர் மானுவேல் வால்ஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்.

வீடுகளை விட்டு வெளியேற்றம்

பிரான்சில் லூய்ரெட், செய்-எட்-மார்ன், நீமர்ஸ் உள்ளிட்ட மாகாணங்களில் மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இம்மழையினால் செயின் நதியின் உயரம் சராசரி உயரமான 19 அடி விட, 6 மீட்டர் அளவுக்கு உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருங்காட்சியகங்கள் மூடல்

பாரிஸ் நகரில் உள்ள சாலைகள்,பாலங்கள், நகர ரயில் நிலையங்களை மற்றும் உலகப்புகழ் பெற்ற லுவர் மற்றும் ஆர்ஸே அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுவிட்டன. நகர மையத்தில் இருந்து 3,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பாரிஸ் மற்றும் மத்திய ஃபிரான்ஸில் மின்சார வசதியின்றி இருக்கின்றனர். மேலும் தென் ஜெர்மனி மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெர்மனியில் 10 பேர் பலி

ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. முனிச் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மழை காரணமாக ஜெர்மனியில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரை காணவில்லை.

மாடிகளில் தஞ்சம்

பவேரியா மாகாணத்தில் வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 10 அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்ந்தோடுவதால் அப்பகுதி மக்கள் தரைத்தளங்களை விட்டு வெளியேறி மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மழை நீடிக்கும்

அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பவேரியா மாகாணம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் பிராந்தியத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. பிரான்ஸ் முதல் உக்ரைன் வரை உள்ள மத்திய ஐரோப்பாவில், இந்த வார இறுதியில் மேலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

At least 15 people have died across central Europe as heavy rainfall caused flooding from France to Ukraine.While two people died in France, 10 were killed in southern Germany as several towns were devastated.

60 words

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத மழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா வில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாரீஸ் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை காரணமாக ஜெர்மனி, பிரான்ஸில் ஆயிரக்கணக்கானோர் வீடு, உடைமைகளை இழந்துள்ளனர்.

English summary
At least 15 people have died across central Europe as heavy rainfall caused flooding from France to Ukraine.While two people died in France, 10 were killed in southern Germany as several towns were devastated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X