For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூயார்க்கின் முதல் “எபோலா ” நோயாளியான மருத்துவர் – தீவிர சிகிச்சையில்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: கினியா நாட்டில் எபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கச் சென்ற அமெரிக்க டாக்டருக்கு எபோலா தாககியுள்ளது.

கிரைக் ஸ்பென்சர் என்ற அந்த மருத்துவர் ஊர் திரும்பியதும் பெல்வியூ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

எபோலா நோய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களாலும் கூட நாடு முழுவது அந்நோய் பரவி வருகின்றது.

எபோலா பரிசோதனைகள்:

எபோலா பரிசோதனைகள்:

அதனால், அமெரிக்க நோய்த்தடுப்பு பிரிவின் மூலமாக பரிசோதனைகள் அவருக்கு நிகழ்த்தப்பட்டன.

தினமும் பரிசோதனைகள்:

தினமும் பரிசோதனைகள்:

தினமும் விமானம் மூலமாக வரும் பலருக்கு எபோலா நோய் தாக்குதல் இருப்பதால், இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் மருத்துவ நிபுணர்களும், அரசின் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.

தூக்கி வரப்பட்ட ஸ்பென்சர்:

தூக்கி வரப்பட்ட ஸ்பென்சர்:

இந்நிலையில் ஸ்பென்சரும் எபோலாவால் பாதிக்கப்பட்டருந்ததாக முதல்கட்ட முடிவுகள் வெளியாகிய நிலையில், பவுலிங் சென்டரில் இருந்த அவரை அழைத்து வந்து தனிமைப்படுத்தியுள்ளனர் டாக்டர்கள்.

தீவிர மருத்துவ சிகிச்சை:

தீவிர மருத்துவ சிகிச்சை:

மறுநாள், 103 டிகிரி டெம்ப்ரேச்சர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.

எபோலா தாக்குதல்:

எபோலா தாக்குதல்:

அடுத்த கட்ட பரிசோதனையில் அவருக்கு எபோலா நோய் தாக்கியுள்ளது என்ற முடிவுகள் வெளியாகி அனைத்து மருத்துவ நிபுணர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இருந்தும் அவருக்கு நோய்த்தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் ரிசல்ட்:

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் ரிசல்ட்:

எனினும், 9 அல்லது 10 நாட்களுக்குப் பின்னர்தான் எபோலாவின் தாக்குதல் பற்றிய முழுமையான அறிகுறிகள் தெரியவர வாய்ப்புள்ளது என்றும் மருத்துவ பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல் “பாஸிடிவ்” மனிதர்:

முதல் “பாஸிடிவ்” மனிதர்:

எனினும், முதன்முதலாக எபோலா பற்றிய சோதனையில் ஒரு "பாஸிடிவ் ரிப்போர்ட்" ஸ்பென்சருக்குத்தான் வந்துள்ளது. இதனால், நியூயார்க்கில் முதல் எபோலா நோய் தாக்குதலுக்கு உள்ளான மனிதர் என்ற பெயர் பெற்றுள்ளார் ஸ்பென்சர். தற்போது தீவிர கண்காணிப்பில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

English summary
A doctor in New York City who recently returned from treating Ebola patients in Guinea tested positive for the Ebola virus Thursday, becoming the city's first diagnosed case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X