பாகிஸ்தானில் இந்து கடவுள் சிலை உடைப்பு.. போராட்டத்தில் குதித்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ள இந்து கோவில் ஒன்றில் கடவுள் சிலை உடைக்கப்பட்டதால் இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் பாகிஸ்தான் நாட்டில் குறைந்த அளவில் இந்து , சீக்கிய, பார்சி உள்ளிட்ட மதங்களை சேர்ந்த மதங்களை தளுவும் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிறுபான்மை மக்கள் மீது சில அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது மத வழிபாட்டு தலங்களை உடைப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் அங்கு அடிக்கடி சட்ட ஒழுங்கு பிரச்சினை எழுவதும் அதிகரித்து வருகிறது.

People were involved in a struggle as the idol of a Hindu god was smashed in Pakistan

இந்த நிலையில் பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கராச்சி நகரம் அருகேயுள்ள நாராயன்புரா என்ற கிராமத்தில் கணிசமான அளவில் இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு மக்கள் வழிபாடுவதற்காக நாராயணர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் அப்பகுதியை சேர்ந்த இந்து மத மக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் வழிபாடு செய்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதி மக்கள் நாராயணர் கோவிலில் வழக்கம்போல் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது கோவிலுக்குள் நுழைந்த நபர் ஒருவர் கோவிலில் அமைக்கப்பட்டு இருந்த காளி அம்மன், விநாயகர் உள்ளிட்ட இந்து மத கடவுள்களின் சிலைகளை சுத்தியலை கொண்டு தாக்கி சேதப்படுத்தினார்.

நபர் ஒருவர் கடவுள் சிலைகளை சேதப்படுத்துவதை பார்த்த கோவிலில் இருந்தவர்கள் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இந்து மத கடவுள் சிலைகளை சுத்தியல் கொண்டு உடைத்த அந்த நபர் முகமது வாலிட் ஷபீர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, முகமதுவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நாராயன்புரா பகுதியில் வசித்து வரும் இந்து மத மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர்கள் போராட்டம் நடத்தினர். கடந்த அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் சங்கார் மாவட்டத்தில் கிப்ரோ என்ற இடத்தில் அமைந்த கிருஷ்ணர் கோவிலில் இருந்த சிலையை மர்ம நபர்கள் அடித்து, உடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+