பிரதமர் மோடியின் பாகிஸ்தான் பயணத்துக்கு எதிராக லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு
இஸ்லாமாபாத்: பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அதிகாரிகள் ராஜ்ய ரீதியிலான அனுமதியின்றி பாகிஸ்தானுக்குள் வந்ததாகக் கூறி லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டுள்ளது.
ரஷ்யா, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில் கடந்த 25 ஆம் தேதி எதிர்பாராத வகையில் திடீர் பயணமாக பாகிஸ்தான் சென்றார். அவருடன் அதிகாரிகள் உள்ளிட்ட 120 பேர் கொண்ட குழுவும் சென்றது.

லாகூரில் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து ஒன்றரை மணி நேரம் பேசிய மோடி, நவாஸ் ஷெரீப்பின் பேத்திக்கு திருமண வாழ்த்து கூறியதுடன், பரிசுப் பொருளையும் வழங்கினார். காங்கிரஸ் கட்சி இதனை கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், மோடியின் ராஜதந்திரத்தையே பாகிஸ்தான் பயணம் காட்டுவதாக பாஜக கூறியது. இந்த பயணத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை முதல் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் வரை பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்த போதிலும், சில சர்ச்சைகள் எழுந்தது.
இந்த நிலையில் மோடியின் பயணுத்துக்கு எதிராக லாகூர் நீதிமன்றத்தில் முனிர் அகமது என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ராஜ்ய ரீதியிலான அனுமதியின்றி மோடி பாகிஸ்தானுக்கு வந்ததாகவும், அவரது வருகை சமூக வலைதளங்கள் வாயிலாகவே பரிமாறப்பட்டது. மோடியின் பயணத்தில் சட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என்பதால் பாகிஸ்தான் அரசும், அந்நாட்டு விமான போக்குவரத்துறை அமைச்சகமும், விமான நிலைய பாதுகாப்புப்படை அதிகாரிகளும் பதில் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications