For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”கைப்பேசிகளின் அலைவரிசை”-உலக பத்திரிக்கை புகைப்பட விருதுகள் 2014

Google Oneindia Tamil News

ஜிபவ்டி: ஆப்பிரிக்காவின் ஜிபவ்டியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம், புகைப்பட கலைக்கான உயரிய விருதான உலக பத்திரிக்கை புகைப்பட விருதை பெற்றுள்ளது.

இவ்விருதானது சிறந்த பத்திரிக்கையில் வெளியாகும் புகைப்படங்களுக்காக 1955ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் புகைப்பட கலைஞர் மற்றும் நிருபரான ஜான் ஸ்டான்மேயரின் இந்த புகைப்படம் ஆப்ரிக்க குடிப்பெயர்ந்தோர் வாழும் ஜிபவ்டி நகரில் எடுக்கப்பட்டுள்ளது.

Photo from Djibouti wins World Press Photo award

நிலாவொளியில் எடுக்கப்பட்டுள்ள இப்புகைப்படத்தில் மனிதர்கள் கைப்பேசியின் அலைவரிசையை சோமாலியாவில் இருந்து பெற முயற்சிக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு குழு உறுப்பினர்களில் ஒருவரான ஜில்லியன் எடெல்ஸ்டன், இப்புகைப்படமானது பெருகி வரும் பிரச்சனைகளான உலகமயமாக்கல்,தொழில்நுட்பம்,புலம் பெயர்தல்,வறுமை,விரக்தி,மனிதத்தன்மை ஆகியவற்றை பிரதிபலிப்பதாக கூறியுள்ளார்.

ஸ்டான்மேயர் இந்த விருது பெற்ற புகைப்படத்தை அமெரிக்கவை சார்ந்த சுற்றுச்சூழல் பத்திரிக்கைக்காக எடுத்துள்ளார்.இந்த விருதானது தனக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம் என கூறியுள்ளார் இவர்.

கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட புகைப்படங்களில் இருந்து இவருடைய இந்த புகைப்படம் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

English summary
The moonlight image shows men trying to get a phone signal from nearby Somalia. Panel member Jillian Edelstein said the photo raised issues of technology, globalisation, migration, poverty, desperation, alienation and humanity. The prestigious awards, selected by an expert panel, have been running since 1955.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X