மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்!
பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது என்று ஹவுடி மோடி நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.
டெக்ஸாஸ்: பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது என்று ஹவுடி மோடி நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹவுஸ்டன் நகரில் இன்று ஹவுடி மோடி விழா நடந்தது. பிரதமர் மோடி இந்த விழாவில் முன்னிலை வகித்தார்.
மொத்தம் 50000 இந்தியர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதில் ஹவுடி மோடி விழாவில் கலந்து கொண்ட அதிபர் டிரம்ப் நீண்ட நேரம் பேசினார்.

என்ன சொன்னார்
டிரம்ப் தனது பேச்சில், ஹவுடி மோடி விழாவை ஒருங்கிணைத்தவர்களுக்கு மிக்க நன்றி. ஹவுஸ்டன் எப்போதும் மிகவும் வலிமையான நகரமாக இருந்துள்ளது. இங்கிருக்கும் மக்கள் எதையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள்.

இங்கு இருக்கும் மக்கள்
இங்கு கூடி இருக்கும் மக்களுக்கு மிகப்பெரிய நன்றி.இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மிகவும் வலிமையாக உள்ளது. டிரம்ப் போல உண்மையான நண்பர் இந்தியாவிற்கு கிடைக்க மாட்டார்.இந்தியர்கள் அமெரிக்காவில் வாழ்வதில் அமெரிக்கா பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறது.

என்ன எண்ணங்கள்
நம்முடைய எண்ணங்கள் ஒரே மாதிரி இருக்கிறது.இரண்டு நாடுகளும் ஒரே மாதிரி வளர்ந்து வருகிறது.இரண்டு நாடுகளும் ஒரே மாதிரியான சட்டங்களை கொண்டு இருக்கிறது.இரண்டு நாடுகளும் மிகப்பெரிய வரலாற்று ஒற்றுமையை கொண்டது.300 மில்லியன் மக்களை மோடி வறுமையில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளார்.

வேகம்
மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி வியக்க வைக்கிறது.இந்தியாவின் பிரதமர் மோடியுடன் இந்த விழாவில் பங்கேற்பதில் பெருமை அடைகிறேன்.ஒவ்வொரு பிரச்சினையையும் வலிமையாக எதிர்கொள்ளும் பிரதமராக மோடி இருக்கிறார். என்னுடைய ஆட்சியின் கீழ் ஹவுஸ்டன் வேகமாக வளர்ந்து வருகிறது.

வேலைவாய்ப்பு
டெக்ஸாஸ் மாகாணத்தில் வேலைவாய்ப்பு அதிகம் ஆகியுள்ளது. டெக்ஸாஸ் மாகாணத்தில் வேலைவாய்ப்பின்மை மொத்தமாக குறைந்துள்ளது.அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை கடந்த 51 வருடங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.வேலைவாய்ப்பின்மை 33% ஆக டெக்ஸாஸ் மாகாணத்தில் குறைந்துள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications