For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்கப்பூர் அதிபர், பிரதமருடன் மோடி சந்திப்பு- 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

By Mathi
Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் டோனி டன் கெங் யாம், பிரதமர் லீ ஹெசின் லூங் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புகளின் போது 10 ஒப்பந்தங்களில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஆசியான் உச்சி மாநாடு, கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் பங்கேற்க பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து சிங்கப்பூர் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் செல்வது இதுவே முதல் முறையாகும். சிங்கப்பூரில் நேற்று நிகழ்ச்சி கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ஜப்பான், சிங்கப்பூர், கொரிய நாடுகளைப் போல இந்தியாவும் சுறுசுறுப்பான ஆற்றல் மிக்க நாடாக மலரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று சிங்கப்பூர் அதிபர் டோனி டன் கெங் யாமை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமர் லீ ஹெசிங் லூங்கையும் பிரதமர் மோடி சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இந்தியா- சிங்கப்பூர் இடையேயான 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி மாலையில் 20 ஆயிரம் இந்தியர்களிடையே இன்று உரையாற்றுகிறார். அதன் பின்னர் அவர் நாடு திரும்புகிறார்.

English summary
Prime Minister Narendra Modi met Singapore President Tony Tan Keng Yam after being accorded a ceremonial welcome on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X