இதுதான் தேசப்பற்று! பிரிக்ஸ் மேடையில் சட்டென குனிந்த மோடி! அப்படியே பாலோ செய்த இன்னொரு தலை! செம
ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் இந்திய தேசியக்கொடியை பார்த்ததும் பிரதமர் மோடி குனிந்து செய்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனை பார்த்த அடுத்த நொடி பிரதமர் மோடியை பாலோ செய்து தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமாபோசாவும் செய்த சம்பவம் அனைவரையும் ஈர்த்தது.
இந்தியா உள்பட பல நாடுகள் இணைந்து பல்வேறு கூட்டமைப்புகளை உருவாக்கி உள்ளன. ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நாடுகள் இடையேயான வர்த்தகம் தொடர்பான மேம்பாட்டுக்கு இந்த கூட்டமைப்புகள் உதவி செய்து வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவும் பல்வேறு நாடுகளின் கூட்டமைப்புகளில் அங்கம் வகித்து வருகிறது. இந்தியா அங்கம் வகிக்கும் நாடுகளின் ஒரு கூட்டமைப்பு தான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
தற்போது பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு தென்ஆப்பிரிக்கா தலைமை வகிக்கிறது. இதனால் அந்த நாட்டின் ஜோகனஸ்பர்க் நகரில் 15வது பிரிக்ஸ் மாநாடு தொடங்கி நடந்து வருகிறது. 24ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். நேற்று ஜோகனஸ்பர்க் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் இந்தியர்கள் ‛வந்தேமாதரம்' என முழங்கி பிரமதர் மோடியை வரவேற்றனர்.
இந்த நிலையில் தான் இன்று பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்கா நாட்டின் அதிபரான சிரில் ரமாபோசாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருநாடுகள் இடையேயான உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனிருந்தார். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது. இதையடுத்து இன்று இரவு பிரதமர் மோடிக்கு தென்ஆப்பிரக்கா அிபர் சிரில் ரமாபோசா இரவு விருந்து வழங்குகிறார்.
மேலும் இன்றைய பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் ஒருபகுதியாக பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகளின் தலைவர்கள் குழுவாக போட்டோ எடுத்து கொண்டனர். இதற்காக மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த மேடையில் 5 நாடுகளின் தலைவர்கள் வந்து சேர்ந்து நின்று குழு போட்டோ எடுத்து கொண்டனர்.
முன்னதாக ஒவ்வொரு நாடுகளின் தலைவர்களும் மேடையில் எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்பதை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த நாடுகளின் தேசியக்கொடிகள் மேடையின் தரைப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது மேடைக்கு வந்த பிரதமர் மோடி தரைப்பகுதியில் இருந்த இந்தியாவின் தேசியக்கொடியை பார்த்தார். அதை மிதித்து விடாமல் இருப்பதில் கவனமாக இருந்த பிரதமர் மோடி திடீரென குனிந்து தேசியக்கொடியை கையில் எடுத்து வைத்து கொண்டார்.
இதனை அருகே இருந்து பார்த்த தென்ஆப்பிரிக்கா நாட்டு அதிபர் சிரில் ரமாபோசாவும் தனது நாட்டின் தேசியக்கொடியை குனிந்து கையில் எடுத்து வைத்து கொண்டார். இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. பிரதமர் மோடியின் இந்த செயலுக்கு அனைத்து மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications