Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூடானின் உயரிய விருதை பெற்ற பிரதமர் மோடி! ‛ஆர்டர் ஆப் தி ட்ரூக் கியால்போ’வின் பின்னணி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திம்பு: 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று பூடான் சென்ற நிலையில் அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‛ஆர்டர் ஆப் தி ட்ரூக் கியால்போ' வழங்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக அண்டை நாடான பூடானுக்கு புறப்பட்டு சென்றார். இன்று காலை சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி பூடானின் பரோ சர்வதேச விமான நிலையம் சென்று இறங்கினார்.அவருக்கு வரேவேற்பு அளிக்கப்பட்டது.

PM Modi receives Bhutan s highest honour award Order of the Druk Gyalpo award

குறிப்பாக பூடானை சேர்ந்தவர்கள் அவர்களின் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி எழுதிய கர்பா பாடலை பாடி வரவேற்றனர்.
இருநாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்தவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பிரதமர் மோடி பூடான் சென்றுள்ளார்.

இந்தியா உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். குறிப்பாக திம்புவில் இந்திய அரசின் உதவுயுடன் கட்டப்பட்டுள்ள அதிநவீன தாய் மற்றும் குழந்தைகளின் சிகிச்சைக்கான மருத்துவமனையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். டெண்ட்ரெல்தாங் திருவிழா மைதானத்தில் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.

மேலும் சிப்ட்ரல் ஊர்வலத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன்பிறகு பிரதமர் மோடி திம்புவில் உள்ள தாஷிச்சோ ஜோங் அரண்மனையில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கை சந்தித்து பேசினார். மேலும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயிரய விருதான ஆர்டர் ஆப் தி ட்ரூக் கியால்போ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதனை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

பூடானை பொறுத்தமட்டில் ஆர்டர் ஆப் தி ட்ரூக் கியால்போ விருது என்பது வாழ்நாள் சாதனைக்கு அரசு சார்பில் வழங்கும் விருதாக உள்ளது. இதுதான் பூடானின் மிகவும் உயரிய விருதாக உள்ளது. பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் உயரிய விருது வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பிரதமர் மோடிக்கு பல நாடுகளில் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக கடந்த ஜூன் மாதம் எகிப்தின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் தி நைல், மே மாதம் பப்புவா நியூ கினியாவின் கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோஹு, பலாவ் குடியரசின் எபகல் விருது, ஆர்டர் ஆஃப் தி 2021 விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

2020ல் அமெரிக்காவின் லீஜியன் ஆப் மெரிட், 2019 ல் பக்ரைனின் கிங் ஹமாத் ஆர்டர் ஆப் தி ரினாய்ஸ்சன்சன், 2019 ல் ரஷ்யாவின் ரஷ்யாவின் ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ விருது, ஐக்கிய அரபு எமிரேட்சின் ஆர்டர் ஆஃப் சயீத் விருது, 2018 ல் பாலஸ்தீனத்தின் கிராண்ட் காலர் விருது, 2016ல் ஆப்கானிஸ்தானின் காஜி அமீர் அமானுல்லா கான் ஸ்டேட் ஆர்டர், சவுதி அரேபியாவின் ஆர்டர் ஆஃப் அப்துல்அஜிஸ் அல் சவுத் விருது உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+