For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் அவளில்லை... ஆபாச நடிகைக்கும் பிரிட்டன் பிரதமருக்கும் வந்த பெயர் குழப்பத்தை பாருங்களேன்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நாளை பதவி விலகுவதை அடுத்து, புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்கிறார். பிரிட்டன் பிரதமராகவுள்ள தெரசா மே-வின் பெயரும், பிரிட்டன் மாடலும், ஆபாச படங்களில் நடித்து வரும் தெரசா மே-வின் பெயரும் ஒரே மாதிரி இருப்பதால், பலரும் ஆபாச நடிகைதான் பிரிட்டன் பிரதமர் ஆக இருப்பதாக நினைத்து அவருக்கு டுவிட் செய்து வாழ்த்துக்கள் அனுப்பி வருகின்றனர்.

ஐரோப்பிய யூனியனில் நீடிப்பது குறித்து, இங்கிலாந்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான மக்கள் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார்.

Porn actress gets mistaken for Britain’s next Prime Minister

இதையடுத்து புதிய பிரதமருக்கான போட்டியில் எரிசக்தி துறை அமைச்சர் ஆண்டிரியா லீட்ஸ் மற்றும் உள்துறை அமைச்சர் தெரசா மே ஆகியோர் களத்தில் இருந்தனர். இந்நிலையில் ஆண்டிரியா திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக தெரசா மே தேர்வு செய்யப்பட்டார்.

பிரதமர் டேவிட் கேமரூன் நாளை பதவி விலகுவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து புதிய பிரதமர் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் இரண்டாவது பெண் பிரதமராக தெரசா மே பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் பிரதமராகவுள்ள தெரசா மே-வின் பெயரும், பிரிட்டன் மாடலும், ஆபாச படங்களில் நடித்து வரும் தெரசா மே-வின் பெயரும் ஒரே மாதிரி இருப்பதால், பலரும் ஆபாச நடிகைதான் பிரிட்டன் பிரதமர் ஆக இருப்பதாக நினைத்து அவருக்கு டுவிட் செய்து வாழ்த்துக்கள் அனுப்பி வருகின்றனர்.

ஆங்கிலத்தில் எழுதும்போது, Theresa May என்று பிரிட்டன் பிரதமராக இருக்கும் தெரசாவும், ஆபாச நடிகை தனது பெயரை Teresa May என்றும் எழுதி வருகின்றனர். இந்த 'H' என்ற ஒரு எழுத்தால் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.

English summary
Teresa May, a glamour model and soft porn actress, has been trending on Twitter recently for a really strange reason. Folks on social media apparently believe that she is to become Britain’s Prime Minister. Baffled? Don’t be. It’s only because her name is similar to that of politician Theresa May.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X