அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை.!

Subscribe to Oneindia Tamil

அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் அலாஸ்காவும் ஒன்று. மக்கள் அடர்த்தி மிகுந்த இந்த மாகாணத்தின் தென் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

Powerful earthquake in the state of Alaska in the United States

அலாஸ்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து கடற்கரை பகுதியில் சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பசிபிக் நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் ரிங் ஆஃப் பயர் பகுதியில் அமைந்துள்ள அலாஸ்காவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கடந்த ஜூலை மாதமும் கடந்தாண்டு நவம்பர் மாதமும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனிடையே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஒரு சில இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் தாங்களாக வெளியேறியுள்ளனர். பூகோள ரீதியாக ரிங் ஆஃப் பயர் பகுதியில் அமைந்துள்ள அலாஸ்காவில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதற்கு காரணம் பூமிக்கடியில் உள்ள பெரும்பாறைகள் ஒன்றுக்கொன்று உரசிக்கொள்வதே ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+