மியான்மருக்காக பிரார்த்தியுங்கள்: பிரபஞ்ச அழகிப்போட்டியில் பதாகை ஏந்திய மியான்மர் அழகி
மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டியில் பங்கேற்ற போட்டியாளர் மியான்மரின் பாரம்பரிய உடையில் மேடையில் அழகு நடை போட்டு வந்த போது ‘‘மியான்மருக்காக பிரார்த்தியுங்கள்’’ என்கிற பதாகையை கையில் ஏந்தி வந்தார் அனைவரின் ஆதரவையும் கோரினார்.
புளோரிடா: பிரபஞ்ச அழகிப்போட்டியில் மியான்மர் நாட்டின் சார்பில் பங்கேற்ற துசர் விண்ட் லவின் என்கிற அழகி மியான்மரின் பாரம்பரிய உடையில் மேடையில் அழகு நடை போட்டு வந்த போது ''மியான்மருக்காக பிரார்த்தியுங்கள்'' என்கிற பதாகையை கையில் ஏந்தி வந்தார். இவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாத போதும் சிறந்த தேசிய ஆடைக்கான விருதை வென்றுள்ளார்.
69வது பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஹாலிவுட் நகரில் உள்ள ராக் ஓட்டல் அண்ட் கேசினோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. 74 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.
மெக்சிகோ நாட்டை சேர்ந்த 26 வயதான ஆண்ட்ரியா மெஸாவும், 28 வயதான பிரேசிலின் ஜூலியா காமாவும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதில் பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெஸா அறிவிக்கப்பட்டார்.

கவனத்தை கவர்ந்த பதாகை
பிரபஞ்ச அழகி போட்டியில் மியான்மர் நாட்டை சேர்ந்த துசர் விண்ட் லவின் பங்கேற்றார். இவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாத போதும் அதற்கு முந்தைய சுற்றுகளில் பங்கேற்றார். அப்போது, அழகி போட்டி நடைபெறும் மேடையில் துசர் விண்ட் லவின் தனது கையில் ஒரு பதாகையுடன் வந்தார். அந்த பதாகையில் 'மியான்மருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என எழுதப்பட்டிருந்தது.

ராணுவத் தாக்குதல்
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது மியான்மர் ராணுவத்தினர் கடுமையான ஒடுக்குமுறைகளை பின்பற்றி வருகின்றனர். மியான்மரில் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் 790 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலியாகும் மக்கள்
மியான்மரில் ராணுவம் நடத்திவரும் தாக்குதல்கள் மற்றும் வன்முறையை உலகநாடுகளுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், உலக நாடுகள் தங்களுக்க்கு உதவவேண்டும் என்பதற்காகவே பிரபஞ்ச அழகி போட்டியில் 'மியான்மருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என்ற பதாகையுடன் துசர் விண்ட் லவின் பங்கேற்றார்.

ஆதரவு கொடுங்கள்
துசர் விண்ட் லவின் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாத போதும் சிறந்த தேசிய ஆடைக்கான விருதை வென்றார். அதன் பின்னர் அவர் பேசியபோது ''எங்கள் மக்கள் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருக்கிறார்கள். ராணுவத்தால் சுடப்படுகிறார்கள். மியான்மரை பற்றி பேச அனைவரையும் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

ஆட்சிக்கவிழ்ப்பு
பிரபஞ்ச அழகியின் மியான்மர் போட்டியாளர் என்கிற முறையில் ஆட்சி கவிழ்ப்பு முதல் என்னால் முடிந்த வரை நான் பேசிக்கொண்டு இருக்கிறேன். எல்லோரும் மியான்மருக்காக பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications