விண்கல் மோதி டைனோசர்கள் அழிந்ததா? மறுக்கும் ஆய்வாளர்கள்! மனிதர்களுக்கும் இது நடக்குமா!
லண்டன்: விண்கல் மோதிதான் டைனோசர்கள் அழிந்தன என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. பெரும்பாலான விஞ்ஞானிகளும் இதைத்தான் நம்புகின்றனர். ஆனால் டைனோசர்கள் விண்கல் மோதலுக்கு முன்னரே அழிய தொடங்கியது என்று சில விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.
இந்த அழிவுக்கு காரணம் என்ன? மற்ற உயிர்களை போலவே மனிதர்களும் இதுபோன்று அழிவை எதிர்கொள்வார்களா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ஆய்வாளர்கள் சமீபத்தில் ஆய்வு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். டைனோசர்கள் அழிந்து போவதற்கு முன்னர் சுமார் 18 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த டைனோசர்களின் படிமங்களை இந்த ஆய்வுக்கு அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார். இப்படியான படிமங்கள் நிறைய வடஅமெரிக்காவில்தான் கிடைத்தது. ஆய்வில், 7.5 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் பரவலாக வாழ்ந்ததாகவும், 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் அவை குறைய தொடங்கின என்றும் தெரிய வந்திருக்கிறது.
அப்படியெனில் அந்த டைனோசர்களுக்கு என்ன நடந்தது? அது அழிந்து போக காரணம் என்ன? நம்மிடம் இதற்கான பதில் இருக்கிறதா? இவ்வளவு பெரிய உயிர் தடம் தெரியாமல் அழிந்து போகுமா? மனிதர்களுக்கும் இது போன்று நடக்குமா என ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கால வரிசையில் நாம் இதை புரிந்துக்கொள்வோம்.
கி.மு 7.5 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் செழிப்பாக இருந்தன
கி.மு 7.5 -7.6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் குறைந்தன
கி.மு 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் விண்கல் மோதியது
இந்த தாக்குதல் நடந்த பின்னர்தான் பூமியில் டைனோசர்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது எப்படி சாத்தியம் என்பதுதான் இப்போது கேள்வி. இப்போதுள்ள மெக்சிகோ பகுதியில் விண்கல் விழுந்திருந்தது. இப்போதும் கூட அந்த பகுதியில் 180 கி.மீ அகலத்திற்கு பெரிய பள்ளம் இருக்கிறது. விண்கல் மோதியதால்தல் எரிமலை வெடிப்பும், நிலநடுக்கங்களும், காட்டு தீயும் ஏற்பட்டிருக்கிறது. அது வளிமண்டலத்தை மூடி, தாவரங்கள் ஒளி சேர்க்கை செய்ய விடாமல் தடுத்திருக்கிறது.
இது சைவ உண்ணிகளை அழிக்க, சைவ உண்ணிகளை நம்பியிருந்த அசைவ உண்ணிகளும் அடுத்தடுத்து அழிய தொடங்கின. ஆக விண்கல் மோதலால்தான் டைனோசர்கள் அழிந்தததற்கு காரணம் என்று தெளிவாக தெரிகிறது. அப்புறம் எப்படி ஏறதாழ ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னரே டைனோசர்கள் அழிய தொடங்கிவிட்டன என ஆய்வாளர்கள் கூறினார்கள்? இதற்கான விடையையும் அதே ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். அதாவது 7.6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோர்களின் படிமங்ககள் பூமியில் ஆழமாக பதிந்திருக்கின்றன. போதுமான படிமங்கள் கிடைக்காததால் ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்.
எது எப்படியோ மனிதர்கள் பாதுகாப்பாக இருந்தால் சரி. ஆனால் மனித அழிவும் கூட விண்கல் மோதலால்தான் ஏற்படுமாம். உஷாரா இருந்துக்கோங்க மக்களே!
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications