டிரம்ப்பிற்கு பதிலடி கொடுக்க வரும் புதின்? அமெரிக்காவுக்கு ‘செக்’ வைத்த ரஷ்யா! உலக போர் ஆபத்து?
மாஸ்கோ: வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் க்ளைமாக்ஸ் கட்டத்தை எட்டியுள்ளது. இரு தரப்பிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ள சூழலில், மறுபுறம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இதில் உள்ளே நுழைந்துள்ளார். இதனால் நிலைமை மேலும் மோசமாகுமோ என்று அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. சுமார் 21 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்த போதிலும் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

உள்ளே வரும் புதின்
இந்த 21 மணி நேரப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ரஷ்யா இதில் தலையிட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் புதின் தனது காய்நகர்த்தலைத் தொடங்கியுள்ளார். ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனைத் தொடர்பு கொண்ட புதின், மத்திய கிழக்கில் அமைதி நிலவ ரஷ்யா உதவத் தயார் எனத் தெரிவித்துள்ளார். போரை விடவும், ராஜதந்திர ரீதியாக இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே புதினின் கருத்தாக உள்ளது.. அமெரிக்காவின் பிடியிலிருந்து வளைகுடா நாடுகளைத் தனது பக்கம் ஈர்க்க ரஷ்யா இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் எனத் தெரிகிறது.
டிரம்ப் மிரட்டல்
முன்னதாக பேச்சுவார்த்தை முறிந்த சில மணி நேரங்களிலேயே டிரம்ப் தனது எக்ஸ் தளத்தில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதாவது ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கக் கடற்படை முடக்கும் என்றும் எந்தவொரு கப்பலும் ஹார்முஸை கடக்க முடியாது எனவும் கூறியுள்ளார். All or none எனச் சொல்லியுள்ள டிரம்ப், "இதுதான் என்னுடைய டீல்" என்றும் கூறியுள்ளார். மேலும், சரியான நேரத்தில் ஈரானைத் தண்டிப்போம் என எச்சரித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானில் அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் ஒரே இடத்தில் கூடினர். அப்போது பேச்சுவார்த்தை பல மணி நேரம் நடந்த போதிலும் எந்தவொரு சுமூக முடிவும் எடுக்கப்படவில்லை. அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், "ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும்" என நிபந்தனை விதித்தார்.
மாறி மாறி குற்றச்சாட்டு
ஈரான் தரப்புத் தலைவர் முகமது பாகர் கலிபாப், "அமெரிக்கா வரம்பு மீறிச் செயல்படுகிறது" என்று கூறியுள்ளது. மேலும், தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என்றும், அமைதியான அணுசக்தித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தங்களுக்கு உரிமை உண்டு என்றும் ஈரான் வாதிடுகிறது. இந்த அணு ஆய்வு விவகாரத்தில் இரு தரப்புக்கும் மோதல் தொடர்ந்ததே பிரச்சனைக்குக் காரணமாகும். பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும், மீண்டும் இரு தரப்பையும் பேச்சுவார்த்தைக்குக் கொண்டு வரப் பாகிஸ்தான் முயன்று வருகிறது. இதற்கான வேலைகளை பாகிஸ்தான் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
உலக நாடுகள்
டிரம்ப் 'பிளாக்' செய்கிறேன் என மிரட்டும் சூழலில், புதின் 'ரூட்' போடுகிறார்... இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் உலக நாடுகள் தான் மாட்டிக் கொண்டு திணறுகிறது. ஹார்முஸ் பஞ்சாயத்து எவ்வளவு சீக்கிரம் தீருகிறதோ.. அவ்வளவு சீக்கிரம் உலக நாடுகளுக்கு நிம்மதி. அப்படி இல்லை என்றால் கச்சா எண்ணெய் தாறுமாறாக உயர்ந்து, அது உலக நாடுகளின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல்












Click it and Unblock the Notifications