For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"12 மடங்கு பவர்புல்!" ஜப்பானை அலறவிட்ட அதே அணு ஆயுதங்கள்.. யோசிக்கும் புதின்.. அமெரிக்கா கூட தப்பாது

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து யோசித்து வருகிறார். இந்த அணு ஆயுதங்கள் எப்படியிருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் போர் கடந்த பிப். மாதம் தொடங்கியது இன்னுமே கூட முடிவுக்கு வரவில்லை. மாதக் கணக்கில் உக்ரைன் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் அந்த இரு நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளும் பொருளாதார ரீதியாக பாதித்துள்ளன.

இந்தப் போரில் உக்ரைனை விட ரஷ்யாவே பெரிய இழப்பை சந்தித்துள்ளது. அதிகபட்சம் சில வாரங்களில் போர் முடிந்துவிடும் என்றே பலரும் நினைத்த நிலையில், ரஷ்ய படைகளால் உண்மையில் வெல்ல முடியவில்லை. புதின் இதனால் கடும் அதிருப்தியில் உள்ளார்.

தென் கொரியாவின் வான் எல்லைக்குள் நுழைந்த.. சீன, ரஷ்ய விமானங்கள்.. பதறிய அமெரிக்கா.. என்ன நடந்தது? தென் கொரியாவின் வான் எல்லைக்குள் நுழைந்த.. சீன, ரஷ்ய விமானங்கள்.. பதறிய அமெரிக்கா.. என்ன நடந்தது?

 யோசிக்கும் புதின்

யோசிக்கும் புதின்

அங்குள்ள பக்முட் கிழக்கு டொனெட்ஸ்கில் போர் தொடரும் நிலையில், அங்குள்ள ரஷ்ய ஆதரவு அலெக்சாண்டர் கோடகோவ்ஸ்கி, போரில் வெற்றி பெற குறிப்பிட்ட அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தார். ரஷ்ய அதிபர் புதினும் கூட இந்த ஐடியாவை தீவிரமாக பரீசிலித்து வருவதாக கூறப்படுகிறது. இரண்டாம் உலக போர் சமயத்தில் ஜப்பானில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அமெரிக்கா அணு குண்டை வீசியது. அதன் பிறகு இப்போது மீண்டும் ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 12 மடங்கு பவர்புல்

12 மடங்கு பவர்புல்

இது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் போடப்பட்ட அணு ஆயுதங்களை விட 12 மடங்கு அதிக பவர்புல்லானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது, 1945 ஆகஸ்ட் 6ஆம் தேதி B-29 அணுகுண்டை அமெரிக்கா வீசியது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நடந்த இந்த முதல் ஆணுகுண்டு தாக்குதலில் 70,000 மற்றும் 35,000 பேர் அப்போதே உயிரிழந்தனர். மேலும்,கொடிய அணுக் கதிர்வீச்சு காரணமாக பல ஆயிரம் பேர் மெல்ல உயிரிழந்தனர். கதிர்வீச்சால் ஏற்பட்ட பாதிப்புகள் அங்கு பல தலைமுறைகளாகவே தொடர்கிறது.

 அமெரிக்கா கூட தப்பாது

அமெரிக்கா கூட தப்பாது

மீண்டும் அதேபோல ஒரு கொடூரத்தை ரஷ்யா செய்யவும் வாய்ப்புள்ளது. ரஷ்யாவிடம் இப்போது இருக்கும் 46,000 டன்கள் அணு ஆயுதங்கள் உள்ளன. அதை அவர்களால் 12,000 கிலோமீட்டர்கள் வரை எடுத்துச் சென்று தாக்குதல் நடத்த முடியும். அதாவது அமெரிக்கா, ஐரோப்பியா என எங்கு நினைத்தாலும் ரஷ்யாவால் தாக்குதல் நடத்த முடியும். அதுவும் ஒரே நேரத்தில் சுமார் 500 கிலோ அணு ஆயுதங்களை சுமந்து சென்று ரஷ்யாவால் தாக்குதல் நடத்த முடியும். இதனால்தான் புதின் இந்த ஐடியாவை பரிசீலிப்பதே ஆபத்தானது என்கிறார்கள் வல்லுநர்கள்.

 ஏன் ஆபத்து

ஏன் ஆபத்து

இந்த சூழலில் கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்குதல் நடத்தக் கூடிய புதிய RS-24 யார்ஸ் ஏவுகணை படங்களையும் ரஷ்யா பகிர்ந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த யார்ஸ் ஏவுகணையால் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளையும் கூட தகர்க்கும் வசதி உள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு முதலே ரஷ்யா இந்த ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. இது முந்தைய RT-2PM2 ஏவுகணையை விட மேம்பட்ட ஏவுகணையாகும். இதில் ஒரே ராக்கெட்டில் 150-200 kT வரையிலான அணு ஆயுதங்களை சுமந்து செல்ல முடியும்.

 அணு ஆயுதங்கள்

அணு ஆயுதங்கள்

இதுபோல ரஷ்யாவிடம் 6-10 ஏவுகணைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. 100 - 300 kT ஆணு ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு இவை 12 000 கிமீ தொலைவுக்கு சென்று தாக்குதல் நடத்தக் கூடியது என்பதே இதை மேலும் ஆபத்தானதாக மாற்றுகிறது. நீண்ட சோதனைக்கு பிறகு, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ரஷ்ய ராணுவத்தில் இந்த வகை ஏவுகணைகள் சேர்க்கப்பட்டன. இது ஒரு பக்கம் இருக்க ரஷ்யா அணு ஆயுதங்களை தேங்கி கடலில் உலா வந்து கொண்டிருக்கும் நீர்முழ்கி கப்பல்களுடன் தங்கள் தொடர்பை மேம்படுத்தவும் முதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளன.

 புதின் பேச்சு

புதின் பேச்சு

முன்னதாக சமீபத்தில் தான் ரஷ்யாவில் டிவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் புதின், தேவைக்கு ஏற்ப அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும் என எச்சரித்திருந்தார். அதாவது ரஷ்யாவின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், ரஷ்யா மக்களையும் பாதுகாக்க, நாங்கள் நிச்சயமாக அனைத்து ஆயுத அமைப்புகளையும் பயன்படுத்துவோம் என்று எச்சரித்திருந்தார். அமெரிக்கா தலைமையிலான நேட்டா விரிவாக்கம் குறித்த வெளிப்படையான எச்சரிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. ரஷ்யாவுக்கு உலகின் பல பகுதிகளில் அணு ஆயுதங்கள் இருக்கும் நிலையில், புதினின் பேச்சும் ரஷ்யாவின் தற்போதைய நடவடிக்கையும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

English summary
Russia President Vladimir Putin is thinking to use strategic nuclear missile: Russia planning to use Nuke which is 12 times more powerful than one destroyed Hiroshima and Nagasaki.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X