“எலான் மஸ்கை போல ஒருவரை நான் பார்த்ததில்லை!” சோவியத் விஞ்ஞானியுடன் ஒப்பிட்ட புதின்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: எலான் மஸ்கை போல ஒருவரை நான் இதற்கு முன்னர் பார்த்ததில்லை என்று ரஷ்ய அதிபர் புதின் பாராட்டி தள்ளியுள்ளார். சோவியத் காலத்து விஞ்ஞானியுடன் மஸ்கை ஒப்பிட்டு புதின் புகழ்ந்திருக்கிறார்.

அமெரிக்காவும் ரஷ்யாவும் சமீப நாட்களாக ராசியாகியிருக்கின்றன. இதனை மேலும் உறுதி செய்யும் வகையில், புதினின் பாராட்டு அமைந்திருக்கிறது.

Putin Elon Musk Russia

மாஸ்கோவிலுள்ள பௌமன் மாஸ்கோ மாநில தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் நேற்று ரஷ்ய அதிபர் புதின் உரையாற்றியிருந்தார். அப்போது அவர் பேசியதாவது, "இத்தகைய ஆளுமைகள் மனித சமுதாயத்தில் அரிதாகவே தோன்றுகின்றனர். சோவியத் காலத்து விஞ்ஞானி செர்கெய் கொரோலியோவை போல எலான் மஸ்க் தெரிகிறார். கோரொலியோவின் எண்ணங்களை பார்க்கும் போது அது அதீதமானவை போன்று தோன்றியது. இதெல்லாம் சாத்தியமே இல்லை என்று சொல்லப்பட்டது.

ஆனால் இறுதியில் அவை சாத்தியமாகின. எலான் மஸ்க்கும் இப்படித்தான் இருக்கிறார். செவ்வாய் கிரகத்திற்கு சென்றே தீர்வேன் என அவர் கங்கனம் கட்டிக்கொண்டிருக்கிறார். இது இன்றைய தேதியில் எனக்கே நம்புவதற்கு கடினமானதாக தோன்றுகிறது. ஆனால் நிச்சம் இது நிறைவேறும்" என்று கூறியுள்ளார்.

புதின் குறிப்பிட்ட சோவியத் விஞ்ஞானி கோரொலியோ விண்வெளி துறைக்கு மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறார். அவரது எழுத்துக்களை விண்வெளியில் பொன்னால் பொறிக்க தகுதியுடையது. காரணம் உலகின் முதல் முதலில் விண்வெளிக்கு சென்ற செயற்கைக்கோள் ஸ்புட்னிக். இதை சோவியத் ரஷ்யா ஏவியது. இந்த திட்டத்திற்கு தலைமை வகித்தவர்தான் கோரொலியோ. இவர் தலைமையில்தான் முதல் செயற்கைக்கோள் விண்வெளிக்கு சென்றது.

அதேபோல, வோஸ்தோக் எனும் விண்கலத்தையும் இவர் வடிவமைத்தார். இந்த விண்கலத்தில்தான் 1961ம் ஆண்டு முதல் முதலாக மனிதன் விண்வெளிக்கு பறந்தான். அவரது பெயர் யூரி ககாரின். இவர் சோவியத் ரஷ்யாவை சேர்ந்தவர். இவ்வளவு சாதனைக்கு கோரொலியோ சொந்தக்காரராவார். அவருடன்தான் எலான் மஸ்க்கை புதின் ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.

எலான் மஸ்க் போடும் பிளான் சாதாரணமானது கிடையாது. செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்புகளை உருவாக்குவது மிக கடினமான விஷயங்களில் ஒன்று. யோசித்து பாருங்கள் 2 கோடி கி.மீ தூரத்தில் உள்ள செவ்வாய்க்கு சென்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்வது சாதாரணமானதா? இங்கிருந்து ஒரு தகவலை அனுப்பினால் அது செவ்வாய்க்கு சென்று சேர 12.5 நிமிடங்கள் ஆகும். சிக்னல் வீக்காக இருந்தால் 22.4 நிமிடங்கள் வரை கூட ஆகலாம். மட்டுமல்லாது செவ்வாய் கிரகத்திலிருந்து நினைத்தவுடன் பூமிக்கு திருமபவும் முடியாது.

அங்கிருந்து கிளம்பினால் பூமிக்கு வந்து சேர சுமார் 9 மாதங்கள் வரை ஆகலாம். எனவேதான் செவ்வாய் கிரகம் பற்றிய ஆய்வுகள் தாமதமாகின்றன. இந்நிலையில் எலான் மஸ்கை சோவியத் ரஷ்ய விஞ்ஞானியுடன் ஒப்பிட்டு பேசியிருப்பது சரியா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+