‘பிரேம் பாருங்க ஜி’.. ஒருபக்கம் ஸ்டாலின்.. இன்னொரு பக்கம் ரஜினி.. அனிருத் கல்யாண போட்டோ
சென்னை: அனிருத் - காவ்யா மாறனின் திருமணம் கிரீஸ் நாட்டில் இன்று நடந்து முடிந்தது. இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி அதிக கவனம் பெற்றுள்ளது. அதில் ஒரு பக்கம் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், இன்னொரு பக்கம் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்து இருக்க நடுவே அனிருத் நடந்து வரும் போட்டோ அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த போட்டோவை பார்க்கும் பலரும் 'பிரேம் பாருங்க ஜி' என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கிரீஸ் நாட்டில் இசையமைப்பாளர் அனிருத், தொழிலதிபரும், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறன் திருமணம் இன்று நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் அனிருத் - காவ்யா மாறன் ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இந்த திருமணத்தில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் பங்கேற்றுள்ளார். அதேபோல் நடிகர் ரஜினிகாந்தும் தனது குடும்பத்துடன் திருமண விழாவில் பங்கேற்றுள்ளார். தற்போது அனிருத் - காவ்யா மாறன் திருமண போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
இந்த போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக ஸ்டாலின் - ரஜினிகாந்த் ஆகியோருக்கு மத்தியில் அனிருத் நடந்து வரும் போட்டோ அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த போட்டோவில் ஒரு பக்க இருக்கையில் ஸ்டாலின் அமர்ந்து கைத்தட்ட, மறுபக்க இருக்கையில் சிரித்தபடி நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்து இருக்கிறார். இவர்கள் 2 பேருக்கும் நடுவே கல்யாண மாப்பிள்ளை அனிருத் கூலிங் கிளாஸ் அணிந்து வேஷ்டி + கோர்ட் அணிந்து அனிருத் நடந்து வருகிறார்.
இந்த போட்டோ தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் அனிருத்தின் குடும்பத்துக்கு மிகவும் நெருங்கிய உறவினர். அதேபோல் ஸ்டாலின், காவ்யா மாறனின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். இவர்கள் 2 பேரும் தமிழகத்தில் மிகவும் பிரபலமாக உள்ள நிலையில் அவர்களுக்கு மத்தியில் மற்றொரு பிரபலமான அனிருத் நடந்து வருவது நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. பலரும், 'பிரேம் பாருங்க ஜி' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
