உணர்ச்சியே இல்லை.. திடீரென மயங்கிய மாஜி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ‘எய்ம்ஸ்'ஸில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இன்று காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது திடீரென்று அவர் மயங்கி விழுந்ததோடு, சில நிமிடங்கள் எந்த உணர்ச்சியும் இன்றி கிடந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ex-vice-president-jagdeep-dhankar-collapses-during-morning-walk-and-rushed-to-aiims-by-ambulance

நம் நாட்டின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர். இவர் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2025 ஜூலை மாதம் வரை துணை ஜனாதிபதியாக பொறுப்பு வகித்து வந்தார். அதன்பிறகு அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஜெகதீப் தன்கருக்கு 75 வயது ஆகும் நிலையில் அவர் அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் அவர் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியானது. அதன்பிறகு தான் தமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியானார்.

ஜெகதீப் தன்கர் தற்போது டெல்லியில வசித்து வருகிறார். இன்று காலையில் ஜெகதீப் தன்கர் வழக்கம்போல் நடைப்பயிற்சி சென்றார். அப்போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருடன் சென்ற பாதுகாவலர்கள் அவரை தட்டி எழுப்ப முயன்றபோது அவரிடம் சில நிமிடங்கள் எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருந்தது. இதனால் அவர்கள் பதறிப்போயினர்.

உடனடியாக அருகே இருந்த போலீசாரின்பிசிஆர் வாகனத்தில் ஜெகதீப் தன்கரை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு பாதி வழியில் ஆம்புலன்ஸ்க்கு மாற்றப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெகதீப் தன்கர், 'கார்டியோ நியூரோ சென்டரில்' அனுமதிக்கப்பட்டுள்ளார். இதயவியல் பிரிவை சேர்ந்த டாக்டர்கள் ஜெகதீப் தன்கருக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்த வுருகின்றனர். தற்போது அவரது உடல்நலம் எப்படி உள்ளது? என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை. அந்த அறிவிப்பு வெளியான பிறகு தான் ஜெகதீப் தன்கருக்கு எந்த பிரச்சனை? அவரது உடல்நலம் எப்படி உள்ளது? என்பது பற்றிய முழு விவரங்கள் வெளியாகும்.

ஜெகதீப் தன்கர் இப்படி திடீரென்று மயங்கி விழுவது இது முதல் முறையல்ல. கடந்த 2 ஆண்டுகளில் பலமுறை அவர் இப்படி மயங்கி விழுந்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2025 மார்ச் மாதம் நெஞ்சுவலி காரணமாக 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் ஜெகதீப் தன்கர் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு 'ஆஞ்சிபிளாஸ்டி' பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிறகு

2025 ஜூன் மாதம் நைனிட்டால் பகுதியில் உள்ள குமான் யூனிவர்சிட்டி விழாவில் ஜெகதீப் தன்கர் மயங்கி விழுந்தார். 2026 ஜனவரி மாதத்தில் வீட்டில் கழிவறைக்கு சென்றபோது ஜெகதீப் தன்கர் 2 முறை மயங்கி விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+