தவெக மாவட்ட நிர்வாகி கைவரிசை.. நெல்லையில் வயதான மூதாட்டியிடம் 13 சவரன் நகை கொள்ளை!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் 70 வயது மூதாட்டியிடம் 13 பவுன் நகை கொள்ளை அடித்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி இசக்கிராஜா கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளை வழக்கில் கைதான இசக்கிராஜா தவெக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் சண்முகவள்ளி (70). இவரது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

Gold Robbery Case

இந்த நிலையில், வீட்டில் வைத்திருந்த சுமார் 13 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை மறைத்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது புதுப்பேட்டை தெருவைச் சேர்ந்த இசக்கிராஜா என்பது தெரியவந்தது. இவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே ஜூஸ் கடை நடத்தி வருவதுடன், தமிழக வெற்றிக் கழகத்தின் நெல்லை வடக்கு மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.

இதையடுத்து இசக்கிராஜாவை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் மரிய ஜான் உத்தரவின்பேரில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இசக்கிராஜா நீக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+