ராகு கேது பெயர்ச்சி 2026: மகரம், கும்பம், மீனம் ராசிக்கு பணவரவு கொட்டும்.. இந்த விஷயங்களில் கவனம்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி பலன் 2026: நிழல் கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேதுவின் பெயர்ச்சியானது நவம்பர் 13 ஆம் தேதி (ஐப்பசி 27) மாலை 5.14 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியால் மகரம், கும்பம், மீனம் ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் வழிபாடுகள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

சர்ப்ப கிரகங்களில் ராகுவும் கேதுவும் சமசப்தம கிரகங்களாகும். 210 டிகிரிக்குள் இந்த கிரகங்களின் பார்வை இருக்கும். நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது கிரகங்கள் 18 மாதங்களுக்கு ஒருமுறை பெயர்ச்சியாவது வழக்கம். வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27, நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5.14 மணியளவில் ராகு பகவான் அவிட்டம் மூன்றாம் பாதம், கும்பத்தில் இருந்து அவிட்டம் 2 பதமான மகரத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

rahu-ketu-peyarchi-2026-what-benefits-will-magaram-kumbam-and-meenam-rasi-natives-receive

கேது பகவான் மகம் 1 ஆம் பாதம் சிம்ம ராசியில் இருந்து, ஆயில்யம் 4 பாதமான கடக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். இந்த சமயத்தில் கடகத்தில் குரு, மீனத்தில் சனி உள்ளனர். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியால் மகரம், கும்பம், மீனம் ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மகரம்

மகரம் ராசியினருக்கு கதிராமங்கலம் பகுதியில் உள்ள வனதுர்க்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். எதிர்பார்க்காத நன்மைகள் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சங்கடங்களில் இருந்து நிவர்த்தி ஏற்படும். உங்களுடைய குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறர் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. சனி 3 ஆம் இடத்தில் இருப்பதால் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் சுபவிரயம் ஏற்படும். ஆரோக்கியத்தில் இதயம், வயிறு, முழு பரிசோதனை செய்து கொள்வது நன்மை பயக்கும்.

தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம். எதிர்பார்க்காத நன்மைகள் ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை உறவு மேன்மை அடையக்கூடிய அமைப்பு. கோளார் பதிகத்தை தினந்தோறும் கேட்பது, படிப்பது ஏற்றத்தைத் தரும். மன நிம்மதியில்லாத தன்மைகள், சிக்கல்கள் எல்லாம் நீங்கி பெரும் வெற்றியையும், சந்தோஷத்தையும் தரும்.

கணவர் மனைவியின் உடல்நலனிலும், மனைவி கணவரின் உடல்நலனிலும் அக்கறை செலுத்துவது நல்லது. பயணங்கள், தொழிலிடத்தில், வெளியிடத்தில் ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் செல்போன்களில் பேசும்போது கூட அதீத கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் சிவன் கோயிலில் உள்ள அக்னீஸ்வரர் தலத்தில் வழிபாடு செய்வது சகலவித நன்மைகளையும் தரும். அந்தக் கோயிலில் பூஜை செய்து, வணங்குவது நன்மையைத் தரும். எதிரிகள் விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம், குடும்பத்தில் கோபம் இல்லாமல் பார்த்துக் கொள்வது மேன்மையைத் தரும். வெளியூர், வெளிநாடு, விலை உயர்ந்த பொருள்கள் விஷயத்தில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக தங்க நகைகளை வாங்கிக் குவிக்கக்கூடிய யோகம் ஏற்படும்.

ஆடை, ஆபரண சேர்க்கை, நிலம் சேர்க்கை ஏற்படக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். பிறந்த குழந்தை முதல் 72 வயது வரை இருக்கக்கூடிய முதியவர்கள் வரை அற்புதமான, அனுகூலமான காலகட்டமாக இருக்கும். அதற்கு மேலான வயதினர் நடக்கும்போதும், ஆரோக்கியத்திலும், வெளிவட்டாரம், பயணங்கள் போன்றவற்றில் மிகுந்த கவனத்தோடு இருப்பது நன்மை பயக்கும்.

அரசியலில் உள்ள இளம் வயதினர் திடீரென பெரும் பொறுப்புகளுக்கு வரக்கூடிய காலகட்டம். இளம் தொழிலதிபர்கள் உருவாகக்கூடிய அமைப்பு. வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது ஏற்றத்தைத் தரும். காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணையை எடுத்துக் கொள்வது மேன்மையைத் தரும். பிறருக்காக ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

மீனம்

மீனம் ராசியினருக்கு ஆலங்குடி குரு பகவான் ஸ்தலத்துக்குச் சென்று வழிபாடு செய்து வருவது விசேஷ பலன்களைத் தரும். ஜென்ம சனி இருப்பதால் ஆரோக்கியத்தில் கழிவுப் பாதை, அடிவயிறு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். தெய்வத்தின் அருளால் வியாபாரம், படிப்பு, தொழில், உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். திடீர் லாபம் ஏற்படும். தொழிலில் இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். கூட்டுத் தொழிலில் இருந்து தனித்தொழில் தொடங்கக்கூடிய யோகம் ஏற்படும். அரசியலில் இருந்த கஷ்டங்கள் நிவர்த்தியாகும். சத்ருக்களின் பிரச்சனைகளில் இருந்து நிவர்த்தியாகும்.

பிள்ளைகள் விஷயத்தில் அதீத கவனம் தேவை. பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. இதுவரை இருந்து வந்த சங்கடங்களில் இருந்து பரிபூரண நிவர்த்தி ஏற்படும். பெரும் வெற்றிகளும், சந்தோஷங்களும் உண்டாகும்.

உடற்பயிற்சியைத் தவிர்க்கும் மீன ராசியினருக்கு மன அழுத்தம் நிச்சயமாக ஏற்படும். வயிறு சம்பந்தப்பட்ட, பாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நிச்சயம் ஏற்படும். வலுக்கலான இடங்களில் மிகுந்த கவனம் தேவை. அபிராமி அந்தாதியில் உள்ள 40, 59, 75 ஆவது பாடல்களைக் கேட்பது, படிப்பது மேன்மையைத் தரும். பிள்ளைகள் விஷயத்தில் யோகத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+