வேஷ்டி + கோர்ட்.. வித்தியாசமான உடையில் காவ்யா மாறனை திருமணம் செய்த அனிருத்.. முதல் போட்டோ இதோ
சென்னை: அனிருத் - காவ்யா மாறனின் திருமணம் இன்று நடந்து முடிந்த நிலையில் அதுதொடர்பான போட்டோக்கள் முதல் முதலாக வெளியாகி உள்ளன. அதில் அனிருத்தின் அணிந்திருந்த ஆடை கவனம் பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் அனிருத், பிரபல தொழிலதிபர் காவ்யா மாறனை கரம் பிடித்துள்ளார். இவர்களின் திருமணம் இன்று வெளிநாட்டில் நடந்து முடிந்தது. கிரீஸ் நாட்டில் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்தின் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள், குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
அனிருத் - காவ்யா மாறன் திருமணம் தொடர்பான போட்டோ, வீடியோக்கள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் முதல் முறையாக அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் அனிருத்தும் - காவ்யா மாறனும் ஒன்றாக சிரித்தபடி நடந்து வருகின்றனர்.
அதில் அனிருத் அணிந்திருந்த உடை அனைவரின் கவனத்தை ஈர்த்தது. ஏனென்றால் அந்த உடை சற்று வித்தியாசமாக இருந்தது. பட்டு வேஷ்டியுடன் அனிருத் கோர்ட் போன்ற ஆடையை அணிந்திருந்தார்.கோர்ட் போன்று அனிருத் அணிந்திருக்கும் ஆடை பார்க்க 'ஜோத்புரி ஜாக்கெட்' போல் 'எம்பிராய்டரி' வேலைப்பாடுகளுடன் உள்ளது.
காவ்யா மாறன் லஹங்கா அணிந்துள்ளார். இருவரின் ஆடையும் மேட்ச்சாக உள்ளது. அவர்கள் இருவரும் கழுத்தில் மாலை அணிந்து குடும்பத்துடன் போஸ் கொடுக்கும் போட்டோவும் வெளியாகி உள்ளது. அந்த போட்டோவில் மாலையுடன் அனிருத் - காவ்யா மாறன் ஆகியோர் நடுவே நிற்கின்றனர். காவ்யா மாறனின் பக்கத்தில் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின், காவ்யா மாறனின் தந்தை கலாநிதி மாறன் - தாய் காவேரி மாறன் ஆகியோர் நிற்கின்றனர்.
மறுபுறம் அனிருத் அருகே நடிகர் ரஜினிகாந்த் நிற்கிறார். அவர் அருகே அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா, தாய் லட்சுமி ஆகியோர் நிற்கின்றனர். இந்த போட்டோவும் இணையதளங்களில் வெளியாகி அதிக கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
